Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கன்னட நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை

09 ஜூலை, 2020 - 14:10 IST
எழுத்தின் அளவு:
Kannada-actor-Susheel-gowda-commits-suicide

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வின் ஈரம் காய்வதற்குள் இதோ அடுத்தததாக கன்னட இளம் நடிகரான சுஷீல் கவுடா என்பவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கன்னட திரையுலகை உலுக்கி போட்டுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள தனது சொந்த ஊரிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார் சுஷீல் கவுடா.

சின்னத்திரை தொடர்களில் நடித்து மெதுவாக வெள்ளித்திரையிலும் அடியெடுத்து வைத்து வளர்ந்து வந்த 30 வயதான சுஷீல் கவுடாவின் தற்கொலைக்காக காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. கன்னடத்தில் பிரபல நடிகரான துனியா விஜய் என்பவருடன் இணைந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கும் 'சலகா' என்கிற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் சுஷீல் கவுடா.

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள துனியா விஜய் சுஷீல் கவுடா பற்றி கூறும்போது, “நானும் அவரும் சலகா என்கிற படத்தில் இணைந்து நடித்தோம்.. 30 நாட்கள் தொடர்ந்து பழகிய எனக்கே அவரது மரணம் மிகப்பெரிய வலியை கொடுக்கிறது என்றால், 30 வருடம் அவருடன் வாழ்ந்த அவரது குடும்பத்தினரின் நிலை பற்றி நினைத்து பார்க்கவே முடியவில்லை. சினிமாவில் நுழைந்து ஒரு நல்ல இடத்திற்கு வந்த நிலையிலும் கூட ஏன் தற்கொலைதான் முடிவு என்பதை தேர்ந்தெடுக்கிறார்கள் என புரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது.. கொரோனாவால் சாவதற்கு மனிதர்களுக்கு பயமில்லை. ஆனால் வேலையின்மையால் குறையும் தன்னம்பிக்கை தான் மனிதர்களை கொல்ல துவங்கி இருக்கிறது. சுஷீல் நீ எதற்காக இந்த முடிவை எடுத்தாயோ தெரியாது, ஆனால் உனக்கு நல்ல எதிர்காலம் இருந்தது என்பது மட்டும் உண்மை.. உன் ஆன்மா சாந்தி அடையட்டும்” என கனத்த மனதுடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார் துனியா விஜய்.,

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : பவர்ஸ்டார் குறித்து நாகபாபு கருத்துவர்மாவுக்கு போரடிக்கிறது போலும் : ... விவசாயத்தில் குதித்த பெரிய குடும்பத்து நடிகர் விவசாயத்தில் குதித்த பெரிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Endrum Indian - Kolkata,இந்தியா
09 ஜூலை, 2020 - 16:52 Report Abuse
Endrum Indian சினிமா நடிகர்களினால் ஒரு பைசா ஒரு பைசா ஒரு பைசா புண்ணியமில்லை இங்கிருக்கும் சாதாரணர்களுக்கு ரசிக வெறியர்கள் தவிர்த்து
Rate this:
s t rajan - chennai,இந்தியா
09 ஜூலை, 2020 - 14:38 Report Abuse
s t rajan இவ்வளவு விவரம் தெரிந்தவர்களே இப்படிக் கோழைத்தனமான முடிவெடுத்தால்... தன் பெற்றோரைப் பற்றிக் கவலைப்படாமல்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in