கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
மிகவும் சர்ச்சையான சம்பவங்களை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் உள்ள பிரபலங்களை பற்றிய சர்ச்சனையான படங்களை எடுக்கவும் தயங்காதவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. அந்தவகையில் அவர் அடுத்தததாக இயக்கும் படத்திற்கு பவர்ஸ்டார் என டைட்டில் வைத்துள்ளார்.. டைட்டிலை பார்க்கும்போதே இது தெலுங்கு சினிமாவின் பவர்ஸ்டார் எனப்படும் பவன் கல்யாணின் கதையோ என்கிற எண்ணம் தான் ஏற்படும்.. ஆனால் இது கற்பனை கதை என மறுத்துள்ளார் வர்மா.
இதுகுறித்து பவன் கல்யாணின் சகோதரரும் அவரது ஜனசேனா கட்சியின் தலைவருமான நாகபாபு கூறும்போது, “ராம்கோபால் வர்மாவுக்கு ஏதாவது சர்ச்சையான விஷயங்களை படமாக்காவிட்டால் போரடிக்கும் போல.. அவர் தாரளமாக பவர்ஸ்டார் பெயரில் படத்தை இயக்கட்டும்.. ஆனால் பவன் கல்யாணின் பெர்சனல் விஷயங்களை அது நினைவூட்டுவதாக இருக்க கூடாது என கூறியுள்ளார்.