பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
ஆந்திராவின் ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் மாருதி ராவ். இவரது மகள் அம்ருதாவை பிரணய் குமார் என்பவர் காதலித்தார். அவர் தாழ்த்தப்பபட்ட ஜாதியை சேர்ந்தவர் என்பதால் மாருதிராவ் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அம்ருதாவும், பிரணய்குமாரும் பதிவு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் மருத்துவமனைக்கு சென்று திரும்பும்போது பிரணய் குமார் கூலிப்படையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை மையமாக வைத்துதான் ராம்கோபால் வர்மா மர்டர் என்ற படத்தை இயக்கி வருகிறர்.
தற்போது இந்தப் படம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட பிரணய் குமாரின் தந்தை ராம் கோபால் வர்மா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இதை தொடர்ந்து இயக்குனர் ராம் கோபால் வர்மா மற்றும் மர்டர் படத்தின் தயாரிப்பாளர் நட்டி கருணா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில மனு தாக்கல் செய்யுமாறு ராம்கோபால் வர்மாவுக்கு கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து ராம்கோபால் வர்மா கூறியிருப்பதாவது: என்னுடைய திரைப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. படத்தில் யாரையும் தனியாக குறிப்பிடவில்லை. வழக்கு தொடர்பாக, எங்கள் வழக்கறிஞர்கள் சட்டப்படி தேவைக்கேற்ப பொருத்தமான விளக்கத்தை அளிப்பார்கள். சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனாக, என்னுடைய அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க நானும் சட்டரீதியாகச் செல்வேன். என்கிறார்.