Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பர்ஸ்ட் லுக்கே காப்பியாம்: சுரேஷ் கோபியின் 250வது படத்துக்கு தடை

06 ஜூலை, 2020 - 15:10 IST
எழுத்தின் அளவு:
Toruble-for-Suresh-gopi-film

மலையாள ஹீரோக்களில் ஆக்ஷன் ஹீரோ என்று பெயர் எடுத்தவர் சுரேஷ் கோபி. தனது 61வது வயதில் தனது 250வது படத்தில் நடிக்கிறார். புதுமுகம் மாத்யூஸ் என்பவர் இயக்குகிறார். அண்மையில் சுரேஷ் கோபியின் பிறந்தநாளை முன்னிட்டு 250வது படத்தின் பர்ஸ்ட்லுக் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இதில் பிரமாண்ட ஒரு கோவில் திருவிழாவில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டு கிடக்கிறார். கொன்ற தகவலை போலீசுக்கு சொல்லிவிட்டு கெத்தாக ஜீப்பின் மீது அமர்ந்து போஸ் கொடுக்கிறார் தாதா சுரேஷ்கோபி. இதில் சுரேஷ் கோபியின் நரைத்த தாடி, கைகடிகாரம் கழுத்து சங்கிலி போன்றவை குளோஸ்அப்பில் காட்டப்படும்.

தற்போது இந்த பர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டர் எனது கடுவா என்ற படத்தை அப்படியே காப்பி அடித்து தயாரித்திருக்கிறார்கள். அப்படியென்றால் கதையும் எனது கதைதான் என்று பிரபல மலையாள இயக்குனர் ஜினு ஆப்ரஹாம் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் நீதிமன்றம் படத்துக்கு இடைக்கால தடைவிதித்துள்ளது. இதுபற்றி விளக்கம் கேட்டு சுரேஷ்கோபி படத்தின் தயாரிப்பாளர், இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அனு ஆப்ரஹாம் கூறும்போது "சுரேஷ்கோபி படத்தை இயக்கும் மாத்யூஸ் பல வருடங்களாக என்னிடம் உதவியாளராக இருந்தவர். நான் எழுதிய கடுவா படத்தின் கதை அவருக்கு தெரியும். அந்த கதையை அவர் திருடி படமாக்கி வருகிறார். அதே கதையை நான் பிருத்விராஜ் நடிப்பில் இயக்கி வருகிறேன்" என்றார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வாய்ப்பு தருவதாக ஏமாற்றும் நபர்களுக்கு மலையாள திரையுலகம் வைத்த செக்வாய்ப்பு தருவதாக ஏமாற்றும் ... மர்டர் படத்தை எதிர்த்து வழக்கு மர்டர் படத்தை எதிர்த்து வழக்கு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

அருணாசலம், சென்னை ஜினு வா இல்லை அனு வா(ஆப்ரஹாம்). எல்லா மொழியிலும் இந்த பிரச்சினை தானா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in