Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அய்யப்பனும் கோஷியும் ரீமேக் : ரவிதேஜா தயக்கம்

28 ஜூன், 2020 - 15:44 IST
எழுத்தின் அளவு:
Raviteja-not-interested-to-act-ayyapanum-kosiyaum-remake

சமீபத்தில் மறைந்த பிரபல மலையாள கதாசிரியர் சாச்சி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் அய்யபனும் கோஷியும்.. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்தப்படத்தின் ரீமேக் உரிமை தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் விலைபோயுள்ளது. ஒரு ஓய்வுபெற்ற இளம் ராணுவ அதிகாரிக்கும் ஒய்வு பெறப்போகும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் நடக்கும் ஈகோ யுத்தம் தான் இந்தப்படத்தின் கதை அதனால் இந்த மூன்று மொழிகளிலுமே அய்யப்பனும் கோஷியுமாக யார் நடிக்க இருக்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இயல்பாகவே எழுந்துள்ளது.

இந்தநிலையில் தெலுங்கில் பிஜுமேனன் கேரக்டரில் ரவிதேஜாவையும் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணாவையும் நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ராணா இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்து ஒப்பந்தத்தில் கையெழுத்தும் போட்டுவிட்டாராம்.. ஆனால் ரவிதேஜா சம்பள விஷயத்தை காரணம் காட்டி தயங்கி நிற்கிறாராம்..

கடந்த சில வருடங்களாகவே ரவிதேஜாவின் மார்க்கெட் சரிந்து கிடப்பதாலும் இது இரண்டு ஹீரோ படம் என்பதாலும் கொரோனா தாக்கம் காரணமாக நடிகர்களின் சம்பள குறைப்பு என சம்பளத் தொகை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாலும் தான் ரவிதேஜா தயக்கம் காட்டுகிறாராம். ஆனால் ரவிதேஜா தான் அந்த கேரக்டருக்கு பொருத்தமானவராக இருப்பார் என்பதால், இந்தப்படம் வெளியானால் ரவிதேஜாவின் மார்க்கெட் எங்கோ போய்விடும் என உற்சாக வார்த்தைகளை கூறி வருகிறதாம் தயாரிப்பு தரப்பு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கதாசிரியரை நீக்கிய பிரித்விராஜ் பட இயக்குனர்கதாசிரியரை நீக்கிய பிரித்விராஜ் பட ... விளம்பர வருமானம் பெறும் மகேஷ் பாபு, சமந்தா விளம்பர வருமானம் பெறும் மகேஷ் பாபு, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in