Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கதாசிரியரை நீக்கிய பிரித்விராஜ் பட இயக்குனர்

28 ஜூன், 2020 - 15:40 IST
எழுத்தின் அளவு:
Prithviraj-movie-story-writer-out-from-film

மலையாள சினிமாவின் பிரபல இயக்குனரான ஆசிக் அபு.. 22 பீமேல் கோட்டயம், வைரஸ் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது நடிகர் பிரித்விராஜை வைத்து 'வாரியம் குன்னன்' வரலாற்று படத்தை இயக்கவுள்ளதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.. 1921ல் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நடந்த மலபார் புரட்சியில் ஆங்கிலேயரை தீவிரமாக எதிர்த்து போராடிய 'சக்கிப்பரம்பன் வாரியம்குன்னத்து. குஞ்சஹம்மது ஹாஜி' என்கிற மாவீரனின் கதாபாத்திரத்தில் தான் பிரித்விராஜ் நடிக்க உள்ளார்

இந்தப்பட அறிவிப்பு வெளியானதும் மேலும் மூன்று பேர் தாங்களும் வாரியம் குன்னன் கதையை படமாக்கப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.. இன்னொரு பக்கம் இந்தப்படத்தை கைவிடவேண்டும் என இயக்குனர் ஆசிக் அபு, மற்றும் பிரித்விராஜ் ஆகியோருக்கு மிரட்டல்கள் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் ஆசிக் அபு இந்தப்படத்தை கைவிடுவதாக இல்லை. மேலும் இந்தப்படத்தின் கதாசிரியர் நீக்கப்பட்டது குறித்து ஒரு சர்ச்சையும் தற்போது எழுந்துள்ளது.

இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலை துவங்கியபோது கதாசிரியர் ரமீஸ் அவருடன் இணைந்து பணியாற்றினாராம். ஆனால் கதை விவாதத்தின்போது தனது கோணத்தில் இஸ்லாமிய கருத்துக்களையும் கதையில் திணித்தாராம். அதில் உடன்பாடு இல்லாத அசிக் அபு உள்ளிட்ட படக்குழுவினர் விளக்கம் கேட்டபோது முரண்பட்டு நின்றதால் அவரை இந்தப்படத்தில் இருந்து நீக்கியதாக ஆசிக் அபு தரப்பில் விளக்கம் அளித்துள்ளார்கள்.. தன் மீது தவறு இருக்கிறது என்று ரமீஸ் ராஜாவும் தனது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்திய சீன எல்லை பின்னணியில் மேஜர் ரவியின் புதிய படம்இந்திய சீன எல்லை பின்னணியில் மேஜர் ... அய்யப்பனும் கோஷியும் ரீமேக் : ரவிதேஜா தயக்கம் அய்யப்பனும் கோஷியும் ரீமேக் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in