Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஐபோனில் படமாகும் பஹத் பாசில் படம்

22 ஜூன், 2020 - 17:16 IST
எழுத்தின் அளவு:
Fahad-Fazil-movie-to-captured-in-IPhone

மலையாள சினிமாவில் புதிய முயற்சியாக பஹத் பாசில் நடிக்கும் படத்தை ஐபோனிலேயே படமாக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் மகேஷ் நாராயணன்.. பல விருதுகளை பெற்ற 'டேக் ஆப்' படத்தை இயக்கிய இவர், தற்போது பஹத் பாசிலை வைத்து மாலிக் என்கிற படத்தையும் இயக்கி முடித்துவிட்டார். அந்தப்படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்தநிலையில் பஹத் பாசிலை வைத்து புதிய படத்தை துவங்க இருப்பதாக இவர் சமீபத்தில் அறிவித்தார் .

ஆனால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து தொழிலாளர்களை அனுப்ப முடியும் என அதற்கு மலையாள திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்கா எதிர்ப்பு தெரிவித்தது.. ஆனால் ஒரு மணி நேரமே ஓடக்கூடிய இந்தப்படத்தை பரிசோதனை முயற்சியாக உருவாக்க இருப்பதாகவும் இதற்கு வெகு குறைந்த அளவிலான தொழிலாளர்களே போதும் எனவும் மகேஷ் நாராயணன் விளக்கம் அளித்தார். இதை தொடர்ந்து இதுபோன்ற முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக பெப்கா அறிவித்தது. இந்தப்படத்தின் முக்கியமான லொக்கேசனே பஹத் பாசிலின் வீடுதான் என்பதும் அவரே இந்தப்படத்தை தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நிறைவேறாமல் போன சாச்சியின் மல்டி ஸ்டாரர் கனவுப்படம்நிறைவேறாமல் போன சாச்சியின் மல்டி ... ஆங்கிலேயரை எதிர்த்த வரலாற்று வீரராக நடிக்கும் பிரித்விராஜ் ஆங்கிலேயரை எதிர்த்த வரலாற்று வீரராக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in