மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
மலையாள திரையுலகில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் சீனிவாசன்.. கதாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்ட இவர். இளம் இயக்குனர் வினீத் சீனிவாசனின் தந்தையும் கூட. இவர் சமீபத்தில் அளித்த்துள்ள பேட்டி ஒன்றில் அங்கன்வாடி பணியாளர்கள் பற்றி தரக்குறைவாக பேசினார் என்று இவர் மீது கேரள பெண்கள் உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த பேட்டியில் சீனிவாசன் கூறும்போது, “வெளிநாட்டில் எல்லாம் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் பணியாளர்கள், குழந்தைகளின் மனநிலையை அறிந்து நடக்கும் சைக்காலஜி தெரிந்த, படித்த பெண்களாகவே இருக்கின்றனர். இங்கே நம் ஊரில் தான் படிப்பே இல்லாதவர்களும் வேலை கிடைக்காதவர்களும் அங்கன்வாடி பணியாளர் வேலைக்கு நியமிக்கப்படுகின்றனர். அவர்களிடம் வளரும் குழந்தைகளும் அவர்களுடைய தரத்தில் தான் வளர்வார்கள்” என கூறியிருந்தார்.
சீனிவாசனின் இந்த கருத்து அங்கன்வாடி பணியாளர்களின் மனதை காயப்படுத்தி உள்ளதாகவும், அதுமட்டுமல்ல பெண்கள் வர்க்கத்தையே இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் அங்கன்வாடி பணியாளர்கள் அமைப்பு பெண்கள் ஆணையத்தில் சீனிவாசன் மீது புகார் கொடுத்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் கேரளாவில் அங்கன்வாடி பணியாளர்களின் செயல்பாடுகள் கேரள அரசால் பாராட்டப்பட்ட நிலையில் சீனிவாசன் அவர்களைப்பற்றி கூறிய இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.