மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை இந்தி சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய திரையுலகிலும் பாகுபாடு காட்டப்படுகிறது என்கிற ரீதியில் பிரச்சனைகளை கிளப்பி விட்டுள்ளது.. அந்தவகையில் மலையாள திரையுலகில் இளம் நடிகராக வளர்ந்து வரும் நீரஜ் மாதவ் என்பவர் மலையாள திரையுலகிலும் இதுபோன்ற பாகுபாடு காட்டப்படுகிறது என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஒப்பனை கலைஞரின் உதவியாளராக இருந்து, டான்ஸ் குரூப்பில் ஒருவராக இணைந்து, நடிகராக முன்னேறியவர் தான் நீரஜ் மாதவ், தற்போதுள்ள இளம் நட்சத்திரங்களான நிவின்பாலி, வினீத் சீனிவாசன், அஜு வர்கீஸ் உள்ளிட்ட நண்பர்கள் பட்டாளத்தில் இவரும் ஒருவர்.. தான் மேக்கப் கலைஞரின் உதவியாளராக பணியாற்றியபோது, புரொடக்சன் மேனேஜர் ஒருவர் தனது சம்பளத்தை வெகுவாக குறைத்ததுடன் தன்னை மிகவும் மட்டமாக நடத்தியதாகவும். இதுபோன்று இன்னும் சில கசப்பான அனுபவங்களை தான் சந்தித்ததாகவும் கூறியுள்ளார் நீரஜ் மாதவ்.
இது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மலையாள தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தின் செயலாளராக உள்ள இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன், நீரஜ் மாதவின் இந்த குற்றச்சாட்டு மலையாள திரையுலகத்தை களங்கப்படுத்துவதாக இருக்கிறது என காட்டமாக பதில் கூறியுள்ளார். ஆதாரம் இல்லாமல் பொத்தாம்பொதுவாக அவர் இப்படி கூறக்கூடாது என கூறியுள்ளதுடன், இதுகுறித்து நீரஜ் மாதவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியுள்ளார். மேலும் மலையாள நடிகர் சங்கத்திடமும் நீரஜ் மாதவின் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார் இயக்குனர் உன்னிகிருஷ்ணன்.