விக்ரம்' பட பிரமோஷனில் 'பஞ்சதந்திரம்' குழு | தாஜ்மஹால் என்னது, மீனாட்சி கோயில் உன்னது - ஒற்றுமைக்கு பாலம் போடும் கமல் | சுந்தர்.சி - குஷ்புவின் மகள் சினிமாவில் அறிமுகமாகிறார் | ஒருவேளை மங்காத்தா 2வாக இருக்குமோ - வைரலான புகைப்படம் | போதைப்பொருள் வழக்கு - ஷாருக்கான் மகன் ஆரியன் கான் அப்பாவியாம் | விக்ரம் படத்தில் சூர்யாவின் கேரக்டர் | கன்னட படத்தில் நடித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | கேரள முதல்வரை சந்தித்த பாதிக்கப்பட்ட நடிகை | மலையாளத்தில் இன்று ஒரே நாளில் 2 போலீஸ் படங்கள் ரிலீஸ் | ஷங்கர் - ராம்சரண் படத்தின் டைட்டில் ‛அதிகாரி' |
மகேஷ்பாபு, ராம்சரண், பிரபாஸ் என தற்போது உள்ள முன்னணி ஹீரோக்கள் பலருக்கும் ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இந்த நிலையில் முதன்முதலாக இந்தியில் தான் இயக்கும் பைட்டர் என்கிற படத்தில் விஜய் தேவரகொண்டாவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குனர் பூரி ஜெகன்நாத். இந்த படத்தை நடிகை சார்மி கவுர், இயக்குனர் பூரி ஜெகன்நாத்துடன் இணைந்து தயாரிக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோஹரும் இதில் ஒரு தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
இந்தப்படம் இந்தியில் தயாராவதால் இதனை பிரமாண்டமாக எடுக்கும் விதமாக படத்தில் ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் விஜய் தேவரகொண்டா மோதும் சண்டை காட்சியை படமாக்க திட்டமிட்டிருந்தாராம் பூரி ஜெகன்நாத்.. ஆனால் கொரோனா தொற்று தாக்கம் காரணமாக வெளிநாட்டு கலைஞர்கள் இங்கே வரமுடியாத சூழல் நிலவுவதால் கதையில் சில மாற்றங்களை செய்து உள்ளூர் சண்டை கலைஞர்களை வைத்தே சண்டைக்காட்சியை படமாக்க முடிவு செய்துள்ளாராம்.