Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தனிமை மையத்திலும் தனி ஜிம் ; பிரித்விராஜ் அசத்தல்

28 மே, 2020 - 20:18 IST
எழுத்தின் அளவு:
Prithvirajs-seprate-gym-during-isolation

நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் தயாராகி வந்த ஆடுஜீவிதம் என்கிற படத்திற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்திருந்தார். தவிர அந்தப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோர்டன் நாட்டிற்கு கடந்த மார்ச் மாதம் சென்ற பிரித்விராஜ் மற்றும் படக்குழுவினர் ஊரடங்கால் ஊர் திரும்ப வழியின்றி கடந்த இரண்டு மாதங்களாக அங்கேயே தங்கியிருந்தனர். சில தினங்களுக்கு முன்புதான் அனைவரும் தனி விமானத்தில் ஊர் திரும்பினர். அந்தவகையில் கொச்சி திரும்பிய பிரித்விராஜ் தற்போது 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இருந்தாலும் அவர் ஏற்கனவே குறைத்திருந்த தனது உடல் எடையை அடுத்தடுத்த படங்களுக்காக வழக்கமான நிலைக்கு கொண்டுவர வேண்டி இருக்கிறது. இதற்காக அவர் தங்கவைக்கப்பட்டுள்ள தனிமை மையத்தில் தினசரி உடற்பயிற்சியை தொடர்வதற்காக அவருக்கென சிறிய அளவிலான ஜிம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர் அவரது பயிற்சியாளர்கள்.

இந்த ஜிம்மின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள பிரித்விராஜ், “நீங்கள் உங்கள் எடையை மீண்டும் முந்தைய வடிவத்திற்கு கொண்டுவர விரும்பினால் உங்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் நீங்கள் அங்கே போவதற்கு முன்பே ஒரு ஜிம்மை உருவாக்கி விட வேண்டும்” என கூறியுள்ளதுடன், முன்னேற்பாடாக இதை உருவாக்கி வைத்த தனது பயிற்சியாளர் விபினுக்கு நன்றியும் கூறியுள்ளார்.... .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒளிப்பதிவாளர் மீது அர்ஜுன் ரெட்டி நடிகை புகார்ஒளிப்பதிவாளர் மீது அர்ஜுன் ரெட்டி ... ஊரடங்கில் எளிய முறையில் மலையாள நடிகர் திருமணம் ஊரடங்கில் எளிய முறையில் மலையாள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in