Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இயக்குனரை ஆச்சர்யப்பட வைத்த சன்னி லியோன்

02 ஏப், 2020 - 14:56 IST
எழுத்தின் அளவு:
Director-about-sunny-leone

பாலிவுட் நடிகை சன்னி லியோன் கடந்த இரண்டு வருடங்களாக தென்னிந்திய மொழிகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அந்தவகையில் மலையாளத்தில் கடந்த வருடம் மம்முட்டி நடித்த மதுர ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.. இருந்தாலும் அதற்கு முன்பே மலையாளத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட படம் தான் ரங்கீலா.. இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மட்டும் கோவாவில் நடைபெற்று முடிந்துள்ளது.

மதுர ராஜா படம் போல வெறுமனே ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடாமல், இந்தப்படத்தின் கதாநாயகியாகவே சன்னி லியோன் நடிக்கிறார். இந்தப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் நாயர் சன்னி லியோன் மிகப்பெரிய நடிகை என்பதால் ஆரம்பத்தில் அவர் சம்பந்தப்படட்ட காட்சிகளை படமாக்கும்போது காலை 9 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்குள் காட்சிகளை படமாக்கி சன்னி லியோனை பேக்கப் செய்து அனுப்பி வைத்து விடுவாராம்..

மூன்று நாட்கள் இதை கவனித்த சன்னி லியோன், நான் உங்களுக்கு தினசரி 12 மணி நேரம் கால்ஷீட் கொடுத்துள்ளேன்.. என்னை வைத்து எட்டு மணி நேரம் தான் படப்பிடிப்பு நடத்துகிறீர்கள்.. ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்.. நான் 12 மணி நேரம் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்.. அதனால் என்னிடத்தில் தயக்கம் வேண்டாம்” என கூற சன்னி லியோன் இவ்வளவு எளிமையும் தொழில் பக்தியும் கொண்டவரா என ஆச்சர்யப்பட்டு போனாராம் இயக்குனர் சந்தோஷ் நாயர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
டேட்டிங் விளம்பரத்தில் நானா..? பாகுபலி நடிகை அதிர்ச்சிடேட்டிங் விளம்பரத்தில் நானா..? ... 76 நாட்களோடு முடிவுக்கு வந்த மலையாள பிக்பாஸ் சீசன்-2 76 நாட்களோடு முடிவுக்கு வந்த மலையாள ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06 ஏப், 2020 - 03:50 Report Abuse
J.V. Iyer நல்ல நடிகை என்று பெயரெடுங்கள் அம்மணி.
Rate this:
sankar - Nellai,இந்தியா
03 ஏப், 2020 - 14:56 Report Abuse
sankar தொழில் என்ன என்பது முக்கியம் அல்ல - அதில் நாம் எவ்வளவு தூரம் உழைக்கிறோம் என்பதே முக்கியம் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in