Advertisement

சிறப்புச்செய்திகள்

என் மனைவி கர்ப்பமானால் நானே சொல்கிறேன் - ஆர்யா | கேரளாவில் யானையை கொன்றவருக்கு லிங்குசாமி வழங்கிய மானசீக தண்டனை | என்ன அவசரம் ; ரஜிஷாவை எரிச்சலூட்டிய விமான பயணிகள் | தென் ஆப்பிரிக்காவில் சிக்கி 3 மாதங்கள் கழித்து கேரளா திரும்பிய படக்குழு | வைரமுத்துவை வெளியேற்ற வேண்டும் ; சின்மயிக்கு ஆதரவாக சி.எஸ்.அமுதன் குரல் | ரூ.352 கோடி வசூலித்த டாப்ஸி படங்கள் | மும்பை தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் சோனுசூட் | தமிழில் பிசியானார் ஸ்மிருதி வெங்கட் | கொரோனா கால ரிலாக்ஸ்: இசை ஆல்பம் வெளியிடும் கவுதம் மேனன் | 10ந் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்பு: தயாரிப்பாளர் சங்கம் முடிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பாலகிருஷ்ணா - ராஜசேகரை தவிர்த்த சிரஞ்சீவி

31 மார், 2020 - 16:08 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-skips-Balakrishna---Rajasekar-name

கொரோனா தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தினசரி தொழிலார்களின் அன்றாட உணவுப் பிரச்சனை பெரிய அளவில் தலை தூக்கியுள்ளது. அரசாங்கத்துடன் கைகோர்த்து இவர்களுக்கு உதவி செய்யும் விதமாக திரையுலக நட்சத்திரங்களும் தங்களால் இயன்ற பண, பொருள் உதவிகளை செய்து வருகிறார்கள். தெலுங்கு திரையுலகில் நடிகர் சிரஞ்சீவி கொரோனா நிவாரண அறக்கட்டளை என்கிற அமைப்பை உருவாக்கி திரையுலகினரிடம் நிதி திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் நிதி அளித்த அனைவருக்கும் அவர்களது பெயர்களை குறிப்பிட்டு பாராட்டி நன்றி சொன்ன சிரஞ்சீவி, சீனியர் நடிகர்களான பாலகிருஷ்ணா மற்றும் டாக்டர் ராஜசேகர் இருவரது பெயர்களை குறிப்பிடவே இல்லை.. பாலகிருஷ்ணா ஏற்கனவே ஆந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்களுக்கும் தலா 50 லட்சம் என ஒரு கோடி ரூபாயை அந்தந்த மாநில அரசுகளிடம் வழங்கி விட்டார். டாக்டர் ராஜசேகரோ தனது ராஜசேகர் அறக்கட்டளை மூலம் தனியாக தொழிலாளர்கள் பலருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்து வருகிறார்.

இவர்களின் தனி ஆவர்த்தனம் காரணமாகவும், ஏற்கனவே இவர்களுடன் இருக்கும் கருத்து வேறுபாடு காரணமாகவும் தான் இவர்கள் பெயரை சிரஞ்சீவி குறிப்பிடாமல் விட்டுவிட்டார் என்றே சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியாகிறது ஸ்படிகம்டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ... டேட்டிங் விளம்பரத்தில் நானா..? பாகுபலி நடிகை அதிர்ச்சி டேட்டிங் விளம்பரத்தில் நானா..? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in