Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஓடாத படத்திற்கு 2ஆம் பாகமா..? - ஹரீஷ் பெராடி கிண்டல்

25 மார், 2020 - 18:35 IST
எழுத்தின் அளவு:
Hareesh-Peradi-slams-sequel-movie-to-Virus

கேரளாவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாக்கி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிபா வைரஸ் தாக்குதல் குறித்து மலையாளத்தில் 'வைரஸ்' என்கிற படம் வெளியானது. பிரபல இயக்குனர் ஆசிக் அபு இயக்கிய இந்தப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரேதியாகவும் வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் உலகெங்கிலும் தீவிரமாகி இருக்கும் நிலையில் இதுகுறித்த படம் ஒன்றை வைரஸ் இரண்டாம் பாகமாக இயக்க வேண்டும் என ரசிகர்கள் சிலரும், திரையுலகத்தினர் சிலரும் ஆசிக் அபுவுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் வில்லன் நடிகரான ஹரீஷ் பெராடி, வைரஸ் படம் வெற்றிப்படமே இல்லை என ஒரு தகவலை வெளியிட்டு அதிர வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “கேரளாவை நிபா வைரஸ் தாக்கியபோது அதை கட்டுக்குள் கொண்டு வந்ததில் கேரள அரசு, குறிப்பாக முதல்வர் பினராயி விஜயன் பங்கு நிறையவே இருந்தது.. ஆனால் அதை வைரஸ் படத்தில் இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.. அதனாலேயே அந்தப்படம் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.. நான் ஒன்றும் பினராயி விஜயனின் ஆதரவாளன் அல்ல... ஆனால் உண்மையை சொல்லாமல் இருக்க கூடாது இல்லையா..?” என கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சோஷியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நிதி நெருக்கடி; தற்கொலை செய்த தயாரிப்பாளர்நிதி நெருக்கடி; தற்கொலை செய்த ... பிக்பாஸ் நடிகருக்கு மோகன்லால் படத்தில் வாய்ப்பு பிக்பாஸ் நடிகருக்கு மோகன்லால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27 மார், 2020 - 02:34 Report Abuse
 nicolethomson ஊன பிழைப்பு பிழைக்கும் பெராடி என்று தோன்றுகிறது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in