யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் | 35 வருடங்களுக்குப் பிறகு வைரலான மோகன்லால் - மம்முட்டி தம்பதி | ஆதிபுருஷ் படத்திற்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை கொடுக்கும் ரன்பீர் கபூர்! |
மலையாள திரையுலகில் இளம் இயக்குனர்களில் அதிக அளவு ரசிகர்களை கொண்டிருப்பவர் இயக்குனர் வினித் சீனிவாசன். 2010ல் மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் படத்தின் மூலம் இயக்குனரான இவர், இதுவரை நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். தொடர்ந்து சீரான இடைவெளியில் படங்களை இயக்க முடியாமல் ரொம்பவே பிஸியான ஒரு நடிகராக மாறிவிட்டார் வினீத் சீனிவாசன். இந்த நிலையில் கடந்த 2016ம் வருடம் நிவின்பாலியை வைத்து ஜேக்கப்பின்டே ஸ்வர்க்க ராஜ்யம் என்கிற படத்தை இயக்கியிருந்தார் வினித் சீனிவாசன்.
அந்தப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களாக படம் இயக்காமல் கிட்டத்தட்ட எட்டு படங்களில் கேரவவாக நடித்துவிட்ட வினித் சீனிவாசன், தற்போது மீண்டும் டைரக்டசனுக்கு திரும்பியுள்ளார். மோகன்லாலின் மகன் பிரணவ் நடிப்பில் ஹிருதயம் என்கிற படத்தை தற்போது இயக்க ஆரம்பித்து விட்டார். இந்த படத்தில் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இதற்கு முன்பு வெளியான வினீத் சீனிவாசனின் படங்களைப் போலவே இதுவும் ஒரு ஃபீல் குட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.