175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
நிவின்பாலி நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் மலையாளம் மற்றும் இந்தியில் வெளியான படம் மூத்தோன். நடிகை கீது மோகன்தாஸ் இந்த படத்தை இயக்கியிருந்தார். கேரளா மற்றும் மும்பை பின்னணியில் அமைந்திருந்த இந்த படத்தின் கதைக்களமும், வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த நிவின்பாலியின் கதாபாத்திரமும், படத்தின் வெற்றிக்கு ஏற்ற படம் அல்ல என்பதையும், அதேசமயம் விருதுகள் பெறுவதற்கு தகுதியான படம் என்றும் நிரூபித்தது. மற்ற நடிகர்கள் நடிக்க தயங்கும் ஒரு சிக்கலான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நிவின்பாலி.
கடந்தாண்டு டொரண்டோ திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த படத்திற்கான விருது பெற்ற இந்த படம், தற்போது பாரிசில் நடைபெற்ற தெற்காசிய திரைப்பட விழாவில் (FFAST) கலந்து கொண்டு சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இந்த மகிழ்ச்சியை இந்த விழாவில் கலந்து கொண்ட நிவின்பாலியும் இயக்குனர் கீது மோகன்தாஸும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.