Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

முதல் நாள் வசூலில் அதிர்ச்சியடைந்த பிக்பிரதர்

17 ஜன, 2020 - 18:49 IST
எழுத்தின் அளவு:
Big-Brother-collection-shocks

தமிழில் ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கான முதல்நாள் ஓபனிங் வசூல் பற்றிய எதிர்பார்ப்பு எப்படி இருக்குமோ அதேபோன்று தான் மலையாளத்தில் மோகன்லால் படங்களுக்கும் முதல் நாள் வசூல் குறித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதற்கு முன்பு வெளியான மோகன்லால் படங்கள், பெரும்பாலும் கேரளா முழுவதும் சேர்த்து நான்கு கோடிக்கு குறைவில்லாத அளவில் வசூலித்து வந்தது.. குறைந்தபட்சமாக என்றாலும் கூட கிட்டத்தட்ட 2.75 கோடிக்கு குறையாமல் முதல் நாள் வசூல் பெற்று வந்தது.

இந்த நிலையில் நேற்று சித்திக் டைரக்ஷனில் மோகன்லால் நடிப்பில் உருவாகி கேரளா முழுவதும் 284 தியேட்டர்களில் வெளியான 'பிக் பிரதர் படம்' அதிர்ச்சிகரமாக கேரளா முழுவதும் சேர்த்து 1.84 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விநியோகஸ்தர்கள் தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் முன்பு போல அல்லாமல், தியேட்டர்களின் எண்ணிக்கை குறைவாக ரிலீஸ் ஆனதும், இந்த படம் வியாழனன்று ரிலீஸ் ஆனதும் வசூல் குறைய காரணம் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஏற்கனவே ரஜினியின் தர்பார், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குஞ்சாக்கோ போபனின் 'அஞ்சாம் பதிரா' மற்றும் தனுஷின் 'பட்டாஸ்' ஆகிய படங்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் பிரிந்ததால் வசூல் குறைந்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் படத்தின் வசூல் கூடும் என்றும் வினியோகஸ்தர்கள் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு வளையத்தில் ஐக்கியமான திலீப்மோகன்லால் - மம்முட்டியின் ஆதரவு ... மொட்டை தலையுடன் வித்தியாசமான தோற்றத்தில் திலீப் மொட்டை தலையுடன் வித்தியாசமான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
21 ஜன, 2020 - 04:47 Report Abuse
vasumathi மக்கள் எல்லோரும் செலவு செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று எல்லா நடிகர்களும் விரும்புகின்றனர்.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
19 ஜன, 2020 - 17:12 Report Abuse
Endrum Indian இது ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் விநியோகஸ்தர்களிடமும் அதிர்ச்சியை ?அப்போ ரசிகர்களுக்கும் கமிஷன் கிடைக்கின்றதா என்ன?? என்ன மாதிரி மீடியா இது???ஏதோ ஒன்று உ ளரவேண்டும் போல இது இருக்கின்றது??/
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in