டுவிட்டர் சாட்டிங்கில் வந்தியத்தேவனும், குந்தவையும்… | ஒரு பாட்டுக்கு ஆடிய ஆர்யா மனைவி சாயிஷா | நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு | காமெடி நடிகர் மீது பாலியல் புகார் | 1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு | இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா' | அன்பே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே அன்பு - விக்னேஷ் சிவன் | 'பத்து தல' - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை |
இந்த வருடம் மூன்று படங்களில் நடித்துள்ள மோகன்லால், தற்போதும் மலையாள சினிமாவில் நான் தான் நம்பர் ஒன் என மீண்டும் ஒரு முறை அழுத்தமாக நிரூபித்துள்ளார். இந்த வருடம் லூசிபர், இட்டிமானி மேட் இன் சைனா மற்றும் தமிழில் காப்பான் என மூன்று படங்களில் நடித்துள்ளார். இதில் 'இட்டிமானி மேட் இன் சைனா' படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. தமிழில் வெளியான காப்பான் படத்திலும் அவருக்கு ஒரு சிறிய அளவிலான குணசித்திர கதாபாத்திரம் தான் கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த வருடத்தின் முதல் படமாக அவருக்கு வெளியான லூசிபர் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றதுடன் மலையாள சினிமாவில் முதன்முறையாக 200 கோடி வசூலித்த திரைப்படம் என்கின்ற பெயரையும் பெற்றது. பிரபல நடிகரான பிரித்திவிராஜ் முதன்முதலாக இந்தப்படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார்.. சொல்லப்போனால் புலி முருகன் என்கிற மாஸ் ஹிட் படத்தை தொடர்ந்து இந்த லூசிபர் படம் மோகன்லாலுக்கு மீண்டும் கமர்ஷியல் ஹிட்டாக் அமைந்தது என்றே சொல்லலாம்.
வரும் 2020ல் மோகன்லால் நடிப்பில் வரலாற்று படமான 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்', சித்திக் இயக்கத்தில் நடித்துவரும் 'பிக் பிரதர்', ஜீத்து ஜோசப் டைரக்சனில் நடிக்கும் 'ராம்', இது தவிர லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக பிரித்விராஜ் டைரக்ஷனில் நடிக்க உள்ள எம்புரான் ஆகிய படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.. அந்தவகையில் அடுத்த வருடமும் மோகன்லாலுக்கு மிகப்பெரிய வெற்றிகளை கொண்ட வருடமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.