கீர்த்தி சுரேஷ் 'ஒல்லியாக' மாற இதுதான் காரணம் | என்னிடமும் ரஜினி சாயலை பார்க்கலாம் : சிவகார்த்திகேயன் | டிஜிட்டலில் வரும் அஜித்தின் ‛அமராவதி' | மறைமுகமாக தனது அடுத்த படத்தை உறுதி செய்த சிவகார்த்திகேயன் | இது ரகசிய திருமணம் இல்ல ஹேப்பி மேரேஜ் : பிரியங்கா விளக்கம் | பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் - நடிகை ரிஹானா அட்வைஸ் | திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா |
கேரள மாநிலம் பாலக்காட்டில் செம்பை என்ற கிராமத்தில் பிறந்தவர், பிரபல கர்நாடக இசைக்கலைஞர் செம்மை வைத்தியநாத பாகதவர். 3 வயதில் முறையாக தன் தந்தையிடமிருந்து இசை கற்கத் தொடங்கிய செம்பை, 1904 ஆம் ஆண்டு 8வது வயதில் தமது அரங்கேற்ற கச்சேரியை தன் சகோதரனுடன் நிகழ்த்தினார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இசையுலகில் திகழ்ந்து பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார். சினிமா பின்னணி பாடகர் யேசுதாசின் குருநாதர்.
தற்போது வரலாற்று படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வரிசையில் வித்வான் செம்பை வைத்தியநாத பாகவதரின் வாழ்க்கை கதையும் படமாக தயாராகிறது. இதில் செம்பை வைத்தியநாத பாகவதர் வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார்.
இசையமைப்பாளரும் இயக்குனருமான விஜித் நம்பியார் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே முந்திரி மேன்சன் என்ற படத்தை இயக்கி உள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் உள்ளிட்ட முழு விபரங்கள் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட இருக்கிறது.