நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு | காமெடி நடிகர் மீது பாலியல் புகார் | 1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு | இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா' | அன்பே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே அன்பு - விக்னேஷ் சிவன் | 'பத்து தல' - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை | ஒரு வருடத்தைக் கடந்த 'எகே 62' அறிவிப்பு : புதிய அறிவிப்பு எப்போது வரும் ? | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு |
மோகன்லால் தற்போது இயக்குனர் சித்திக் இயக்கத்தில் ‛பிக் பிரதர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் வலது கையில் கட்டு போட்டபடி மருத்துவர் ஒருவருடன் நிற்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானது. கையில் ஏற்பட்டுள்ள சிறிய கட்டி காரணமாக மோகன்லாலுக்கு சிறிய அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கூட மோகன்லாலுடன் அந்த படத்தில் நடித்து வரும் நடிகர் அனூப் மேனன் தான், தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எதேச்சையாக மோகன்லாலுடன் கை குலுக்கினேன்.. அப்போது மோகன்லால் வலியால் முகம் சுருங்குவது கண்டு விசாரித்தபோதுதான் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் சண்டைக் காட்சிகளின்போது அவருக்கு கையில் அடிபட்டு சிறிய அளவில் பிராக்சர் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.. ஆனால் அதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்தினால் படப்பிடிப்பு தடைபட்டு விடுமே என்கிற எண்ணத்தில் வலியை மறைத்துக் கொண்டு படப்பிடிப்பில் நடித்து வந்துள்ளார். இது அவரது அர்ப்பணிப்பு உணர்வை காட்டுகிறது என்றாலும் மோகன்லால் இது போன்ற சில சீரியசான விஷயங்களில் தன்னுடைய குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்” என அன்புக் கோரிக்கை வைத்துள்ளார் அனூப் மேனன்.