Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இலியானா - தெலுங்கு சினிமாவின் வடிவேலு ஆன கதை

17 டிச, 2019 - 14:53 IST
எழுத்தின் அளவு:
Trouble-for-Ileana-in-Telugu

2006ல் தெலுங்கு சினிமாவில் வெளியான போக்கிரி திரைப்படத்தின் மூலம் மகேஷ்பாபு மட்டும் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெறவில்லை.. அந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்த இலியானாவும் நம்பர் ஒன் கதாநாயகியாக முன்னேறினார்.. இத்தனைக்கும் அது அவருக்கு இரண்டாவது படம் தான். அதைத்தொடர்ந்து மளமளவென படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகில் ராசியான நடிகை என்கிற பெயரைப் பெற்ற இலியானாவின் வெற்றிப்பயணத்திற்கு 2012இல் ஜூனியர் என்டிஆர் உடன் அவர் நடித்த சக்தி என்கிற படம் முட்டுக்கட்டை போட்டது.

ஆம்.. அந்த படத்தில் துவக்கத்திலிருந்தே ஜூனியர் என்டிஆர் உடன் ஈகோ மோதலில் ஈடுபட்டார் இலியானா. இதனால் படத்தின் இயக்குனர் இலியானாவின் காட்சிகளுக்கான முக்கியத்துவத்தை குறைத்து அவரை டம்மி ஆக்கினார். இந்த கோபத்தால் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இலியானா கலந்து கொள்ளவில்லை.. படமும் வெளியாகி பிளாப் ஆனது. இதைத்தொடர்ந்து இலியானா அளித்த பேட்டியில் தன்னிடம் சொன்ன கதையை மாற்றி எடுத்ததால் தான் படம் பிளாப் ஆனது என்றும், தான் நடித்து வந்த இன்னொரு படமான நேனு நா ராட்சசி என்கிற படம் சூப்பராக ஓடும் என்றும் கூறினார்..

அவ்வளவுதான்.. அதையடுத்து வந்த நாட்களில் இலியானாவுக்கு தெலுங்கில் எந்த புதிய படமும் ஒப்பந்தம் ஆகவில்லை.. 2012ல் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த படங்களை மட்டும் நடித்துக்கொடுத்தார்.. கிட்டதட்ட ஆறு வருடங்கள் தெலுங்கு திரையுலகம் அவரை விலக்கி வைத்திருந்தது. இந்த சமயத்தில் இந்தியில் நுழைந்த இலியானா, ஏதோ பெயரளவுக்கு தனது திரையுலக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். 6 ஆண்டுக்கு பின் மீண்டும் கடந்த ஆண்டு ரவிதேஜாவுடன் அமர் அக்பர் அந்தோணி என்கிற படத்தின் மூலம் தெலுங்கில் நுழைந்தாலும் இலியானாவின் மீது போடப்பட்ட மறைமுக ரெட்கார்டு இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
4 நாட்களில் ரூ.60 கோடி வசூலித்த ‛மாமாங்கம்'4 நாட்களில் ரூ.60 கோடி வசூலித்த ... அடுத்தடுத்து 2 படங்கள் ரிலீஸ்: உற்சாகத்தில் வேதிகா அடுத்தடுத்து 2 படங்கள் ரிலீஸ்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

bala - chennai,இந்தியா
19 டிச, 2019 - 15:50 Report Abuse
bala Nalla .... Girl Eliyana
Rate this:
bala - chennai,இந்தியா
19 டிச, 2019 - 15:45 Report Abuse
bala Eliyana
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18 டிச, 2019 - 11:32 Report Abuse
Ramesh R metoo என்று ஜூனியர் NTR மீது புகார் கூற வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in