18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டமாக டிசம்பர் 20ல் வெளியாக இருக்கும் படம் ‛டிரைவிங் லைசென்ஸ்'. சண்டக்கோழி வில்லன் நடிகரான லாலின் மகன் ஜீன் பால் லால் இயக்கியுள்ள இந்தப்படம், ஒரு சினிமா ஹீரோவுக்கும், அவரது தீவிர ரசிகராக இருக்கும் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு இடையே ஏற்படும் ஈகோ மோதலை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
பொதுவாக சினிமா பின்னணியில் உருவாகும் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காது என்று சொல்வார்கள்.. ஆனால் இந்த டிரைவிங் லைசென்ஸ் திரைப்படம் ரிலீஸுக்கு முன்பாகவே அதன் பட்ஜெட் தொகையை வசூலித்து விட்டது திரையுலகில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை டிவி ஒன்று 6 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியுள்ளது. அதேபோல இதன் வெளிநாட்டு உரிமையாக 2.55 கோடியும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் மூலம் 4.5 கோடியும் கிடைத்துள்ளது.. இந்தவகையில் தயாரிப்பாளருக்கு படம் வெளியாவதற்கு முன்பே அசல் தொகை கைக்கு வந்துவிட்டது. சமீபகாலமாக பிரித்விராஜ் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பே இந்த வியாபாரத்திற்கு காரணமென்று சொல்லப்படுகிறது.