சீரியலில் மாஸான என்ட்ரி : வனிதாவின் புது ட்ராக் | அழகு நாயகிகளின் ரீ-யூனியன் | சிகரெட் பிடிக்கும் ‛‛சிவன்'', ‛‛பார்வதி'': லீனாவின் அடுத்த ‛‛குசும்பு'' | பொன்னியின் செல்வன் - குந்தவையாக த்ரிஷா | நரேன் வேடத்தை பெண்ணாக மாற்றிய அஜய் தேவ்கன் | காமெடி நடிகரிடம் மன்னிப்பு கேட்ட அடார் லவ் இயக்குனர் | ஐந்து நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட்ட யானை | போக்சோ சட்டத்தில் ‛கும்கி' நடிகர் கைது | சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்னை ; ராம்குமார், பிரபு மீது சகோதரிகள் வழக்கு | எல்லோருக்கும் என் உளங்கனிந்த நன்றி : இளையராஜா |
கடந்த ஒரு மாதமாகவே மலையாள சினிமாவில் மிகப்பெரிய சர்ச்சையில் அடிபட்டு வருபவர் இளம் நடிகரான ஷேன் நிகம். தயாரிப்பாளர்களுடன் சம்பள விஷயத்தில் பிரச்சனை செய்து, தான் நடித்துவந்த இரண்டு படங்களை முடித்து கொடுக்காமல், வேறு ஒரு படத்திற்கு நடிப்பதற்காக தனது கெட்டப்பை இவர் மாற்றியது மிகுந்த பரபரப்பையும் தயாரிப்பாளர்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியது. இவர் மீதான புகார் குறித்து விசாரித்த தயாரிப்பாளர் சங்கம் இவர் மீது தடைவிதிக்கும் அளவிற்கு நிலைமை சீரியஸாக உள்ளது.
இந்த நிலையில் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கவும், தன்னைத்தானே வளர்த்துக் கொள்ளவும் தானே சொந்தமாக இரண்டு படங்களை தயாரிக்கப் போவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஷேன் நிகம்.. சிங்கிள் மற்றும் சரமணி கோட்ட என்கிற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு படங்களையும், சினிமாவில் ஓரளவு அனுபவம் பெற்ற புதிய இயக்குனர்கள் தான் இயக்க உள்ளார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்