Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மகேஷ்பாபுவுக்கு சம்பளம் 42 கோடியா?: மலைக்கும் பட உலகம்

14 டிச, 2019 - 11:18 IST
எழுத்தின் அளவு:
did-mahesh-babu-get-42-cr-salary

தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவர் மகேஷ்பாபு. டோலிவுட்டின் பிரின்ஸ் என அழைக்கப்படும் மகேஷ்பாபு, தற்போது நடித்துள்ள படம், சரிலேரு நீக்கெவ்வரு. இதில் ராணுவ வீரராக மகேஷ் பாபு நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை விஜயசாந்தி, முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.


அனில் ரவிபுடி இயக்கியுள்ள இந்தப் படத்தில், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், ராஜேந்திர பிரசாத், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர்.


இந்தப் படம் அடுத்த மாதம் 11ல் ரிலீசாகிறது. படத்தை 3 நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கின்றன. அதில் ஒன்று, ஹீரோ மகேஷ்பாபுவின் நிறுவனம். இந்நிலையில், இந்தப் படத்துக்காக, நடிகர் மகேஷ்பாபு சம்பளமாக 42 கோடி ரூபாய் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நடிகர் மகேஷ்பாபு வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தைக் காட்டிலும், இது இரு மடங்கு என கூறப்படுகிறது.


இந்த அளவுக்கான சம்பளத்தைத்தான் அவர் வாங்கினார் என்பது நிஜமானால், தெலுங்கு சினிமாவில் ஒரு ஹீரோ ஒரு படத்துக்கு பெற்ற அதிகபட்சத் தொகையாக அது இருக்கும் எனக் கூறப்படுகிறது.



Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் தேவரகொண்டாவின் மனைவி வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்விஜய் தேவரகொண்டாவின் மனைவி ... அம்மாவின் கனவை நிறைவேற்றுவேன்: ஸ்ரீ மயி அம்மாவின் கனவை நிறைவேற்றுவேன்: ஸ்ரீ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

mohan - chennai,இந்தியா
20 டிச, 2019 - 09:34 Report Abuse
mohan எல்லாம் சூதாட்ட உலகம்....இதனால் மக்களுக்கு என்ன பயன்... ஒருத்தரும் சிந்திப்பதில்லை...
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
16 டிச, 2019 - 16:45 Report Abuse
Endrum Indian ஏன் ரஜினிக்கு ரூ 132 கோடி யாயிர்றே அதை விட குறைவு தானே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in