3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா | 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன் | 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! |
தமிழ் படங்களில் போராளியாகவும், நல்ல ஆசிரியராகவும், விவசாயியாகவும் நடித்து தனக்கென ஒரு நல்ல இமேஜை உருவாக்கி வைத்திருக்கும் சமுத்திரகனி, தெலுங்கில் அடுத்தடுத்து வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் சமுத்திரகனி வில்லனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ராம்சரணும், ஜுனியர் என்.டி.ஆரும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்திற்காக சமுத்திரகனி 60 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
சமுத்திரகனி நடிக்க வேண்டிய பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் ரவி தேஜா நடிக்க இருக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதனை கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். இதில் ரவி தேஜா போலீஸ் அதிகாரியாகவும், சமுத்திரகனி அவரை எதிர்த்து நிற்கும் அரசியல்வாதி மற்றும் தாதாவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நாடோடிகளின் தெலுங்கு ரீமேக்கில் ரவி தேஜா நடித்தார். அதனை சமுத்திரகனி இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.