'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
சமீபநாட்களாக சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குறித்தும் மாசுக்கட்டுப்பாடு குறித்தும் பிரச்சாரம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்பது குறித்து பேசி வருகிறார். இது குறித்து பலவிதமான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத், பிரதமருக்கு சில கேள்விகளையும் கோரிக்கைகளையும் வைக்கும் விதமாக ஒரு முகநூல் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “பிளாஸ்டிக் பொருளை தடைசெய்வதால் மட்டுமே சுற்றுப்புற சூழலை தூய்மைப்படுத்தி விடமுடியும் என்று நினைக்கிறீர்களா..? பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு அதற்கு பதிலாக பேப்பர் மற்றும் காட்டன் பைகளை உபயோகப்படுத்த ஆரம்பித்தால் அதற்காக நிறைய மரங்கள் வெட்டப்படும்.. அதனால் இன்னும் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும் அதிக அபாயம் இருக்கிறதே.. அதனால் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதற்கு பதிலாக அவற்றை எப்படி மறுசுழற்சி செய்து, மறு பயன்பாட்டிற்கு கொண்டு வறுவது என்பது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு கற்பிக்க வேண்டும்” என அதில் குறிப்பிட்டுள்ளார் பூரி ஜெகன்நாத்.