'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
மலையாள நடிகை மஞ்சுவாரியர், சமீபத்தில் வெளியான அசுரன் படத்தின் மூலம் தமிழிலும் முதன்முதலாக அடியெடுத்து வைத்துள்ளார். இந்தநிலையில் கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியான ஒடியன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.. அந்த படத்தை இயக்கியவர் பிரபல விளம்பர பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன். தற்போது இந்த ஸ்ரீகுமார் மேனன் , தன்னை மிரட்டுவதாகவும் சோஷியல் மீடியாவில் தன்னைப் பற்றி தவறான தகவல்களை பதிவிடுவதாகவும் கூறி அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
இத்தனைக்கும் மஞ்சுவாரியரும், ஸ்ரீகுமார் மேனனும் நல்ல நண்பர்களாக இருந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் ஸ்ரீகுமர் மேனன் தனது முகநூல் பதிவு ஒன்றில் தான் இயக்கிய ஒடியன் படம் சரியாக போகாதது குறித்து விளக்கம் அளித்திருந்தார். அதில் படத்தின் நாயகியாக நடித்திருந்த மஞ்சு வாரியர் படத்திற்கு தேவையான அளவு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பது போல குற்றம் சாட்டும் விதமாக கூறியிருந்தார்.
அதுமட்டுமல்ல, மஞ்சு வாரியருக்கு அவரது இக்கட்டான தருணங்களில், தான் எவ்வாறு துணை நின்றார் என்பதையும் எந்த அளவிற்கு உதவிகள் செய்துள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீகுமார் மேனன். மேலும் அந்த பட சமயத்தில், ஒருமுறை மஞ்சு வாரியாரின் தாய் ஸ்ரீகுமார் மேனனின் முன்பாகவே மஞ்சு வாரியரிடம், “இவர் உனக்கு கஷ்டமான சமயங்களில் எந்த அளவிற்கு உதவி செய்திருக்கிறார் என்பதை மறந்து விடாதே” என்று கூட கூறினாராம். ஆனால் கடைசி நேரத்தில் அதையெல்லாம் மஞ்சு வாரியர் மறந்து விட்டார் என்றும் கூறியிருக்கிறார் ஸ்ரீகுமார் மேனன்.
நண்பராக இருந்து கொண்டு தான் செய்த உதவிகளை சொல்லிக் காட்டி தன்மேல் அதிக அக்கறை இருப்பதாக காட்டிக் கொண்டதும் ஒடியன் படம் சரியாக ஓடாமல் போனதற்கு தன்னை ஒரு காரணமாக ஸ்ரீகுமார் மேனன் சுட்டிக்காட்டியதும் மஞ்சு வாரியரை கோபம் கொள்ளச் செய்திருக்கிறது அதனால்தான் தற்போது அவர் மீது இப்படி ஒரு புகார் அளித்து உள்ளார் என கூறப்படுகிறது.