திருமதி.ஹிட்லர் சீரியலின் ஹீரோயின் என்ன செய்கிறார் தெரியுமா? | ஜான்சி ராணி ரோலில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரச்சிதா | திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள் | டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் | வெந்து தணிந்தது காடு 2வது பாடல் ஆக.,14ல் வெளியாகிறது |
மலையாளத்தில் கடந்த வருடம் மிக பரபரப்பாக பேசப்பட்டு வெளியான படம் ஒரு அடார் லவ்.. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர் மூலமாக அவர் மட்டுமல்லாமல், இந்த படமும் இந்த படத்தின் இயக்குனர் ஒமர் லுலுவும் இன்னும் பிரபலமானார்கள். ஆனால் இந்தப் படம் பெரிதாக போகாத நிலையில், தற்போது தமாகா என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஓமர் லுலு. இந்த படத்தில் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்து வருகிறார்.. முக்கிய வேடத்தில் நடிகர் முகேஷ் நடிக்கிறார்
சமீபத்தில் இந்த படத்தில் நடிகர் முகேஷ், சக்திமான் கெட்டப்பில் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியானது. இதைத்தொடர்ந்து பல வருடங்களுக்கு முன் சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்த முகேஷ் கன்னா, தன்னிடம் அனுமதி பெறாமல் சக்திமான் உடைகளை பயன்படுத்தியது குறித்து ஆட்சேபம் தெரிவித்து தமாகா படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்..
இதையடுத்து இந்தக்காட்சி வெறும் சில நொடிகள் மட்டுமே வந்து செல்லும் ஒரு காட்சி என்றும், சக்திமான் கதாபாத்திரம் படத்தில் வேறு எந்த இடத்திலும் ஒரு கதாபாத்திரமாக பயன்படுத்தவில்லை என்றும், முகேஷ் கன்னாவிடம் அனுமதி பெறாமல் இதைப் பயன்படுத்தியது தவறு என்றும் கடிதம் மூலம் விளக்கம் அளித்திருந்தார் இயக்குனர் ஓமர் லுலு.
இந்த நிலையில் அவரது கடிதத்தை பரிசீலித்த முகேஷ் கன்னா, தமாகா படத்தில் சக்திமான் உருவத்தை பயன்படுத்திக் கொள்ள தடையில்லை என்று அனுமதி அளித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் இதற்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குனருர் ஓமர் லுலு, தற்போது சற்றே ஆசுவாசம் ஆகியுள்ளார்