சிங்கம் படத்தில் நடித்தது எப்படி? - உண்மையை போட்டுடைத்த வனஜா | புது சீரியலில் எண்ட்ரியாகும் வீஜே கதிர் | கவனம் ஈர்த்த சீரியல் போஸ்டர் : வரிசையாக குவிந்த வாத்தியார்கள் | ரம்யாவின் வொர்க் அவுட் வீடியோவிற்கு குவியும் கமெண்ட்ஸ் | 'புஷ்பா 2' : கமல்ஹாசன் மட்டும் மிஸ்ஸிங் | கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர் | 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி | மகாபாரத கதையை இயக்குவது எப்போது? - ராஜமவுலி வெளியிட்ட தகவல் | பிரமாண்டமாக நடைபெற இருக்கும் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா | ரஜினியுடன் மீண்டும் இணையும் யோகி பாபு |
தெலுங்குத் திரையுலகத்தில் பாகுபலி 2 படத்திற்குப் பிறகு பிரம்மாண்டத் தயாரிப்பாக வெளிவந்துள்ள படம் சைரா. சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா, சுதீப், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தை தெலுங்குத் திரையுலகப் பிரபலங்கள் பலர் பாராட்டி வருகிறார்கள். அதில் பாகுபலி இயக்குனர் ராஜ மவுலியின் பாராட்டு அதிகம் கவனிக்கப்பட்டுள்ளது.
பாகுபலி நாயகனாக பிரபாஸ் நடித்து வெளிவந்த பிரம்மாண்டப் படமான சாஹோ படம் பற்றி எந்தப் பாராட்டையும் தெரிவிக்காத ராஜமவுலி சைரா படத்தைப் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“ஸ்ரீ உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை அப்படியே சுவாசித்திருக்கிறார் சிரஞ்சீவி. இழந்த ஒரு வரலாற்றிற்கு அவர் மீண்டும் தீ மூட்டியிருக்கிறார். ஜெகபதிபாபு, சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா அனைத்து கதாபாத்திரங்களும் கதையுடன் மூழ்கி பின்னிப் பிணைந்துள்ளன. சரண், இயக்குனர் சுரேந்தர் ஆகியோருக்கு பிரமாதமான, தகுதியான வெற்றிக்கு வாழ்த்துகள்,” என்று பாராட்டியுள்ளார்.