கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர் | 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி | மகாபாரத கதையை இயக்குவது எப்போது? - ராஜமவுலி வெளியிட்ட தகவல் | பிரமாண்டமாக நடைபெற இருக்கும் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா | ரஜினியுடன் மீண்டும் இணையும் யோகி பாபு | மூன்றாவது முறையாக ராம்குமாருடன் இணையும் விஷ்ணு விஷால் | சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | பொன்னியின் செல்வன் - ஆதித்ய கரிகாலனாக விக்ரம் : புதிய போஸ்டர் வெளியீடு | விரைவில் புதிய வீட்டில் குடியேறும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! | நிஜத்தில் கேஜிஎப் போல தான் வாழ்க்கை இருக்கிறது ; சமந்தா |
தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான வரலாற்று படமான சைரா நரசிம்ம ரெட்டி இன்று(அக்.,2) வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களாக பரபரப்பாக நடந்தது. அந்தவகையில் ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, நடிகர் அல்லு அர்ஜுன் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்பட்டது..
ஆனால் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் இல்லை.. வாழ்த்து தெரிக்கவும் இல்லை... அவ்வளவு ஏன் சைரா பட டிரைலர் குறித்து ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவும் இல்லை. அதேசமயம் இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்ற கோபி சந்த்தின் 'சாணக்யா' பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.. சிரஞ்சீவி குடும்பத்தினருடன் ஏதேனும் பிணக்கில் இருக்கிறாரா அல்லு அர்ஜுன் என்கிற சந்தேகம் எழுந்த நிலையில், சைரா படம் வெற்றிபெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அல்லு அர்ஜுன்.
இதுபற்றி தான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சைரா.. தெலுங்கு சினிமாவிற்கு உண்மையிலேயே பெருமைப்படும் தருணம் இது. பல வருடங்களுக்கு முன் மகதீரா படம் பார்த்தபோது, அதேபோன்ற ஒரு வரலாற்று படத்தில் சிரஞ்சீவியை பார்க்க விரும்பினேன். அது இன்று உண்மையாகி இருக்கிறது. தயாரிப்பாளரும் என் அன்பு சகோதரனுமாகிய ராம்சரணுக்கு எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. தந்தைக்கு மகன் கொடுத்துள்ள மிகச்சிறந்த பரிசு இது. மொத்த படக்குழுவினருகும் எனது வாழ்த்துக்கள்.. இயக்குனர் சுரேந்தர் ரெட்டிக்கு என் சிறப்பு மரியாதை.. இந்தப்படம் ரசிகர்கள் இதயத்தில் பல நாட்கள் வீற்றிருக்கும்படி மாயாஜாலம் செய்ய நான் விரும்புகிறேன்” என கூறியுள்ளார் அல்லு அர்ஜுன்.