50வது படத்தின் படப்பிடிப்பு : அஞ்சலி மகிழ்ச்சி | தரத்திற்காக தள்ளிப் போன 'அயலான்' | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படப்பிடிப்பு ரத்து : காரணம் என்ன? | 'கமெண்ட்' ஆப் செய்து ஏஆர் ரஹ்மான் டுவீட் | ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா திருமணம் | 'சந்திரமுகி 3' நடந்தால் ரஜினிகாந்த் நடிப்பாரா ? | விக்ரமின் மகாவீர் கர்ணன் விரைவில் துவக்கம் ; இயக்குனர் அறிவிப்பு | உத்தரகண்ட் முதல்வரை சந்தித்த ஆதிபுருஷ் நாயகி ; பின்னணி இதுதான் | தெறி ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கீர்த்தி சுரேஷ்! | இந்தியாவில் ஹிந்தியில் மட்டும் 500 கோடி கடக்கும் 'ஜவான்' |
தெலுங்குத் திரையுலகத்தில் பல முன்னணி நடிகர்களுடனும், பல வெற்றிப் படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்தவர் வேணு மாதவ்(39). டிவிக்களிலும் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருந்திருக்கிறார்.
தமிழில் வெளிவந்த 'என்னவளே, காதல் சுகமானது' ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார். சிறுநீரக பிரச்னையால் பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக அவர் அதிகமான படங்களில் நடிக்கவில்லை. 2016ல் தான் அவர் நடித்த படம் கடைசியாக வெளியானது.
கடந்த சில மாதங்களாக அவருடைய உடல்நலம் பற்றி பல வதந்திகள் பரவியது. ஆனால், தான் நலமாக இருப்பதாக வேணு மாதவ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை நேற்று மோசமானதை அடுத்து அவரை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஐசியூவில் அவர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன்றி அவரது உயிர் பிரிந்தது.