Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

வீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கு: மோகன்லால் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

22 செப், 2019 - 11:23 IST
எழுத்தின் அளவு:
charge-sheet-filed-against-mohanlal

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு எர்னாகுளம் அருகே உள்ள தேவராவில் சொந்த பங்களா உள்ளது. கடந்த 2012ம் ஆண்டு இந்த வீட்டை வருமானவரித்துறையினர் சோதனையிட்டாபாது வீட்டில் அனுமதியின்றி யானை தந்தங்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அதனை கைப்பற்றி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இது மோகன்லாலுக்கு பரிசாக கிடைத்த யானை தந்தம் என்று கூறி வனத்துறை மோகன்லால் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதை எதிர்த்து பவுலோஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படியும் இது தொடர்பான விபரங்களை தாக்கல் செய்யும்படியும் கேரள அரசுக்கும் வனத்துறைக்கும் கோர்ட் உத்தரவிட்டது.


இதை தொடர்ந்து இந்த வழக்கில் மோகன்லால் உள்ளிட்ட 4 பேர் மீது வனத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை இவர்கள் மீறி உள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். வழக்கின் இந்த முன்னேற்றம் கேரள சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சாஹோ இயக்குனரின் அடுத்த படம்?சாஹோ இயக்குனரின் அடுத்த படம்? ஜெயசூர்யாவுக்கு வில்லனாக பிக்பாஸ் வின்னர் ஜெயசூர்யாவுக்கு வில்லனாக பிக்பாஸ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Balagan Krishnan - bettystown,அயர்லாந்து
26 செப், 2019 - 01:01 Report Abuse
Balagan Krishnan As per Wild Life Protection Act anyone possesing animal skin,stufings of animal,ivery etc must have forest declaration which can get from them after showing them the source of getting it.If it is leagaly accep they issue declaration to posses if it was illeagal they proceed action aganist him.No one should posses animal parts without declaration.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in