Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

'சைரா' டிரைலரைப் பாராட்டிய ராஜமவுலி

21 செப், 2019 - 13:15 IST
எழுத்தின் அளவு:
Rajamouli-congrats-Syeraa-trailer

தெலுங்குத் திரையுலகத்தில் அடுத்த பிரம்மாண்டமான படமாக சிரஞ்சீவி நடித்துள்ள 'சைரா' படம், அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. இரு தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரைலருக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்கள்.

ஹிந்தி நடிகர் ஆமீர்கான், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளார்கள். அவற்றில் 'பாகுபலி' இயக்குனர் ராஜமவுலியின் பாராட்டு உன்னிப்பாக கவனிக்க வைத்துள்ளது.

'பாகுபலி' நாயகன் பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ' படம் பற்றியோ, அதற்கு முன்பு வெளியான அப்படத்தின் டிரைலர் பற்றியோ ராஜமவுலி எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை. 'சாஹோ' படத்தின் டீசர் பற்றி மட்டுமே அவர் கருத்து பதிவு செய்திருந்தார்.

'சாஹோ' படத்தைப் பாராட்டி ராஜமவுலி கருத்து வெளியிட்டிருந்தால் அது தெலுங்கில் அந்தப் படத்திற்கு கூடுதலாகக் கொஞ்சம் வசூலைக் கொடுத்திருக்கும் என்றும் டோலிவுட்டில் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் 'சாஹோ' படம் பற்றி மௌனம் காத்தார்.

இந்நிலையில் 'சைரா' டிரைலரை அவர் பாராட்டியுள்ளது அதிக கவனத்தைப் பெறுகிறது. நாளை(செப்.,21) நடைபெற உள்ள 'சைரா' விழாவிலும் அவர் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மெகா பட வேலைகளில் இறங்கிய மகேஷ்பாபுமெகா பட வேலைகளில் இறங்கிய மகேஷ்பாபு சாஹோ இயக்குனரின் அடுத்த படம்? சாஹோ இயக்குனரின் அடுத்த படம்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in