Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பட்ஜெட் 2 கோடி: வசூல் ரூ.45 கோடி

22 ஆக, 2019 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Budget-Rs.2-crore,-collection-Rs.45-crore

50 கோடிகளை கொட்டி படம் எடுத்து ஐந்து கோடி ரூபாய் லாபம் பார்க்க திணறி வரும் சூழலில், சின்ன பட்ஜெட் படங்கள் அழிந்து வருகின்றன என்று தமிழ்சினிமாவில் பலரும் குரல் கொடுத்து வரும் வேளையில், மலையாள திரையுலகில் இரண்டு கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட படம் ஒன்று 45 கோடி ரூபாய் வசூலித்து சத்தமில்லாமல் சாதனை செய்துள்ளது.. இதனை படக்குழுவினரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ‛தண்ணீர் மாதன் தினங்கள்' என்கிற படம் தான் இந்த சாதனையை படைத்துள்ளது. இத்தனைக்கும் அறிமுக இயக்குனர் இயக்கிய இந்த படத்தில் நடிகர் வினீத் சீனிவாசனை தவிர மற்ற எல்லோரும் புதுமுகங்களே.. குறிப்பாக இந்த படம் முழுவதும் மாணவர்களின் பள்ளிப் பருவ கால நிகழ்வுகளை மையமாகக் கொண்டு, அதேசமயம் வழக்கமான படமாக இல்லாமல் புதிய பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது தான் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

அதுதான் கேரளாவில் தற்போது பெய்து வரும் கனமழையிலும் கூட இந்த படம் தடங்கல் இல்லாமல் ஓடிக்கொண்டிருப்பதற்கு காரணம்.. அநேகமாக விரைவில் இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்குவதற்கு போட்டா போட்டி நடக்கும் என எதிர்பார்க்கலாம்

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வெளிநாட்டில் திருமண நாளை கொண்டாடிய நஸ்ரியாவெளிநாட்டில் திருமண நாளை கொண்டாடிய ... ரசிகர்களை எச்சரித்த மோகன்லால் ரசிகர்களை எச்சரித்த மோகன்லால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23 ஆக, 2019 - 04:27 Report Abuse
 nicolethomson அருமையான படம் இது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in