இரண்டிலும் தொடர விரும்புகிறேன்! | ஸ்ரீரெட்டியின் சாதனை! | விதியை கூறும், 'பச்சை விளக்கு' | வில்லனான பிரபல ஓவியர்! | கேட்டு வாங்கிய முத்தம்! | மணிரத்னம் - ஏ.ஆர்.முருகதாஸ் போட்டி! | என் வீட்டிற்கு வர வேண்டாம்! | எனக்கு திருப்புமுனை தந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ்- அனிருத் | ரஜினி எடுத்த சபதம் | ரஜினியை தப்பா பேசினா நானும் பேசுவேன் : லாரன்ஸ் |
2018ம் ஆண்டிற்கான 66வது தேசிய திரைப்பட விருதுகள் இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ்த் திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மலையாள நடிகரான மம்முட்டி, கடந்த ஆண்டு வெளிவந்த தமிழ்ப் படமான பேரன்பு படத்தில் நாயகனாக நடித்திருந்தார். அந்தப் படமும் தேசிய விருதுகள் போட்டியில் கலந்து கொண்டது. அந்தப் படத்திற்காக மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அளிக்கப்படாதது குறித்து மம்முட்டி ரசிகர்கள் பலரும் தேசிய விருது தேர்வுக்குழு தலைவருக்கு கடும் சொற்களுடன் மெயில்களை அனுப்பி உள்ளனர்.
அது குறித்து தேசிய விருது குழுவின் தலைவர் ராகுர் ரவைல், பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டிருந்தார். “மிஸ்டர் மம்முட்டி, உங்கள் ரசிகர்களிடமிருந்தும், ரசிகர் மன்றங்களிலிருந்தும் மிக மோசமான, வெறுப்பான மெயில்களைப் பெற்று வருகிறேன். நடுவர்களின் முடிவுகளை யாரும் கேள்வி கேட்க முடியாது. உங்களின் பேரன்பு படம் மாநில குழுவிலேயே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அது மத்திய குழுவிற்கே வரவில்லை. உங்கள் ரசிகர்களும், பக்தர்களும் இத்துடன் நிறுத்திக் கொள்ளட்டும்,” என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு மம்முட்டி, “மன்னிக்கவும் சார், அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நடந்தவற்றிற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்,” என பதிலளித்துள்ளார். கடந்த வருட தேசிய விருதுகளில் தமிழ்ப் படங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பேரன்பு விவகாரத்தில் நடந்த பேஸ்புக் பதிவுகள் மேலும் கடும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.