175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
திருநங்கைகள் என்றாலே கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானவர்களாக இருந்தார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் மீதான பார்வை மாறியிருக்கிறது. அவர்களுக்கான மரியாதையையும், அந்தஸ்தையும் அரசாங்கங்கள் ஏற்படுத்தித் தந்துள்ளன.
தெலுங்கில் கடந்த வாரம் ஆரம்பமான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் திருநங்கையான தமன்னா சிம்ஹாத்ரி என்பவர் நேற்று வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் நுழைந்திருக்கிறார். தெலுங்கு டிவிக்களில் அவர் பல விவாத நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துள்ளார். அவரும் போட்டியாளராக நுழைவதை அங்கு ஏற்கெனவே இருக்கும் போட்டியாளர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். இது அவர்களுக்கு சடும் சவாலாகவே இருக்கும்.
திருநங்கை ஒருவருடன் வீட்டுக்குள் இருக்கும் ஆண், பெண் போட்டியாளர்கள் எப்படி பழகுகிறார்கள் என்பது அவர்களுக்கான மதீப்பீட்டைத் தரும். ரியாலிட்டி ஷோ ஒன்றில் திருநங்கை ஒருவரை சேர்த்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். அதே சமயம் இது ரசிகர்களிடம் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது இனிமேல்தான் தெரிய வரும்.