ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு | லாவண்யா - வருண் தேஜ் திருமணம் இத்தாலி நாட்டில் ? | என் கண்ணீரை துடைத்தார், என்னை தாங்கி நின்றார் : காதலரின் போட்டோவை பகிர்ந்து இலியானா நெகிழ்ச்சி | 'விடுதலை 2' : மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பம் ? | மீண்டும் தள்ளிப் போகும் வாடிவாசல் | சத்தமில்லாமல் புதிய படத்தில் நடித்து வரும் கவின் | பாலகிருஷ்ணாவின் 109வது படத்தின் அறிவிப்பு வெளியானது | வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு : சின்மயி போன்று தைரியமாக வெளியே சொல்லணும் - பாடகி புவனா சேஷன் | நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி | பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் அர்ஜுன் தாஸ் |
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான டியர் காம்ரேட் படம் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியானது. நான்கு மொழிகளிலும் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக மலையாளத்தில் முதல் நாளே கேரளா முழுவதும் 81 லட்சம் வசூலை குவித்துள்ளது..
கேரளாவைப் பொறுத்தவரை தெலுங்கு நடிகர்களில் அல்லு அர்ஜுன் படத்திற்கு மட்டும் தான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது.. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 'என் பெயர் சூர்யா' படம் முதல் நாள் வசூலாக 77 லட்சம் வசூலித்திருந்தது. தற்போது அதை டியர் காம்ரேட் படம் முறியடித்துள்ளது.
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் குறிப்பாக இன்கெம் காவாலே பாடல் மூலம் ராஷ்மிகாவும் மலையாள ரசிகர்களின் மனதில் ஒரு இடத்தை பிடித்து விட்டதால் இவர்கள் ஜோடியாக நடித்த டியர் காம்ரேட் படத்திற்கு ரிலீஸுக்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பு இருந்ததாக விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமல்ல மலையாள ரசிகர்களுக்கு காம்ரேட் என்கிற வார்த்தையும் கல்லூரி, மாணவர் தலைவர் என்கிற கதையம்சம் கொண்ட படங்களும் ரொம்பவே பிடிக்கும் என்பதும் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு இன்னொரு காரணம்.