Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இன்று முதல் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3

21 ஜூலை, 2019 - 15:07 IST
எழுத்தின் அளவு:
telugu-bigg-boss-3-session-begins-today-onwards

தென்னிந்திய டிவிக்களில் தமிழ், தெலுங்கில் இரண்டு வருடங்களுக்கு முன்பு 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஆரம்பமானது. இரண்டு சீசன்களும் வெற்றிகரமாக நடந்து முடிந்து தமிழில் மூன்றாவது சீசன் கடந்த மாதம் ஜுன் 23ம் தேதி ஆரம்பமாகி ஒரு மாதத்தைத் தொட உள்ளது.

தமிழில் தொடர்ந்து மூன்று சீசன்களாக கமல்ஹாசன் தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். ஆனால், தெலுங்கில் சீசனுக்கு ஒருவராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முதல் சீசனில் ஜுனியர் என்டிஆர், இரண்டாவது சீசனில் நானி, மூன்றாவது சீசனில் நாகார்ஜுனா என மாறிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.


ஜுனியர் என்டிஆர், நானி ஆகியோரை விட சீனியர் நடிகரான நாகார்ஜுனா இந்த மூன்றாவது சீசனை தொகுத்து வழங்குவதற்கு தெலுங்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ஏற்கெனவே அவர் டிவியில் 'மீலோ எவரு கோடீஸ்வரடு' நிகழ்ச்சியை வெற்றிகரமாக தொகுத்து வழங்கி உள்ளார்.


இன்று ஆரம்பமாக உள்ள தெலுங்கு சீசன் 3யில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் என ஒரு பட்டியல் பரவி வருகிறது. அதில் அதிக பிரபலமானவர்கள் என யாருமேயில்லை. ஜிவி பிரகாஷ் நடித்த 'குப்பத்து ராஜா' படத்தை இயக்கிய நடன இயக்குனர் பாபா பாஸ்கர் பெயரும் அந்தப் பட்டியலில் உள்ளது. முழு விவரம் இன்று இரவு 9 மணிக்கு நிகழ்ச்சியில்தான் தெரிய வரும்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அனுஷ்காவிற்கு சைலன்ஸ் படக்குழு கொடுத்த பரிசுஅனுஷ்காவிற்கு சைலன்ஸ் படக்குழு ... நாகார்ஜூனா படத்தை எதிர்பார்க்கும் ரகுல் ப்ரீத் சிங் நாகார்ஜூனா படத்தை எதிர்பார்க்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in