Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஆபாசப் பேச்சு : பிக்பாஸ் மீது போலீசில் புகார் அளித்த பிரபல நடிகை

17 ஜூலை, 2019 - 13:40 IST
எழுத்தின் அளவு:
Actress-Gayatri-Gupta-Files-Case-on-Bigg-Boss

ஐதராபாத்: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாகவும், போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதால் தான் நஷ்டமடைந்திருப்பதாகவும் பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி குப்தா போலீசில் புகார் அளித்துள்ளார்.

வழக்கமாக பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்குத் தான் விதவிதமாக பிரச்சினைகள் வரும். ஆனால், இம்முறை அதற்கு மாறாக பிக் பாஸிற்கே பல பிரச்சினைகள் உருவாகி வருகிறது.

தமிழில் வனிதாவை விசாரிக்க பிக்பாஸ் வீட்டிற்கே நேரில் சென்றனர் போலீசார். வேறு வழியில்லாமல் அவர்களை வீட்டிற்குள் விசாரணைக்காக அனுமதித்தனர் பிக்பாஸ் குழுவினர். தற்போது வனிதாவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். வீட்டிற்குள் வனிதா செய்த வேலையை மீரா பார்த்து வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக இருக்கிறது. நடிகர் நாகர்ஜூனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால் சமீபத்தில் பிரபல சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளினி ஸ்ரேயா, 'பிக் பாஸில் கலந்து கொள்ள தன்னை படுக்கைக்கு அழைப்பதாகக்' கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் மீண்டும் தெலுங்கு பிக்பாஸ் மற்றொரு பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கு செக்ஸ் வைத்துக் கொள்ளாமல் இருக்க முடியுமா என தன்னிடம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டதாக நடிகை காயத்ரி குப்தா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் போலீசிலும் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் அவர், 'நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு இரண்டரை மாதங்களுக்கு முன்பே என்னிடம் ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால் தற்போது அந்த ஒப்பந்தத்தை அவர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். ஒப்பந்தம் போடப்பட்டதால், நான் வேறு எந்த புதிய வாய்ப்புகளையும் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் நான் நிறைய வாய்ப்புகளை இழந்துள்ளேன்.

பிக் பாஸ் வீட்டில் 100 நாட்களுக்கு செக்ஸ் இல்லாமல் வாழ முடியுமா என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம் கேட்டனர். இது என்ன மாதிரியான கேள்வி என நான் அவர்களிடம் கேட்டேன். டிஆர்பிக்கு உத்தரவாதம் தரவில்லை எனில் உங்களை நாங்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும் என ஸ்டார் எம்ஏஏ நிர்வாகிகள் என்னிடம் கேட்டனர்' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், 'பிக் பாஸ் ஒப்பந்தத்தில் உள்ள சில விஷயங்கள் முற்றிலுமாக நியாயத்துக்கு புறம்பாக உள்ளது. போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கு எதிராக பேசக்கூடாது என ஒப்பந்தம் போடுகின்றனர். இது அடிமைத்தனத்தை தவிர வேறு என்ன. பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து நாம் பேச வேண்டாமா? எனவே தான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன். எனக்கு நஷ்டஈடு வேண்டும். பிக் பாஸால் நான் நிறைய இழந்துவிட்டேன்' என காயதிரி கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மம்முட்டி - ராஜ்கிரண் கூட்டணியில் ஷைலாக்மம்முட்டி - ராஜ்கிரண் கூட்டணியில் ... 10ம் ஆண்டில் மூவரணி 10ம் ஆண்டில் மூவரணி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Pillai Rm - nagapattinam,இந்தியா
07 ஆக, 2019 - 12:45 Report Abuse
Pillai Rm மீரா மிதுன் சொல்வா
Rate this:
Jayvee - chennai,இந்தியா
19 ஜூலை, 2019 - 14:53 Report Abuse
Jayvee வெகு சீக்கிரம் கமல் மீதும் இப்படி புகார்கள் வரலாம்... ஏற்கனவே கைதுக்கு பயந்து தலைமறைவானவர்கள் எல்லாம் இங்கு பிடிபட்டார்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in