Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

போலீசாரின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது : மம்முட்டி படத்துக்கு டிஜிபி பாராட்டு

27 ஜூன், 2019 - 13:27 IST
எழுத்தின் அளவு:
Kerala-DGP-congrats-Mammootty-movie

சமீபத்தில் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் உண்ட என்கிற படம் வெளியானது. மம்முட்டி சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம், வடமாநிலத்தில் தேர்தல் பணிக்காக கேரளாவில் இருந்து செல்லும் போலீசார் சந்திக்கும் இன்னல்களை தெளிவாக படம் பிடித்துக் காட்டியுள்ளது. அதனாலேயே நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக இந்த படம் சிறப்புக் காட்சியாக திரையிட்டு காட்டப்பட்டது.

படம் முடிந்த பின்பு பேசிய கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, இந்த படம் பற்றி கூறும்போது, “சினிமாவுக்காக ஒன்றிரண்டு காட்சிகள் கற்பனையாக சித்தரிக்கப்பட்டு இருந்தாலும் படத்தின் முக்கால்வாசி காட்சிகள் இயல்பு தன்மையுடனேயே படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒவ்வொரு போலீசாரும் ஒற்றுமையாக ஒன்றிணைந்து எதிரிகளை எப்படி வீழ்த்துவது என்பதை ஒரு பாடமாகவே சொல்லித்தருகிறது” என பாராட்டியுள்ளார்.

டிஜிபி லோக்நாத் பெஹ்ரா எப்போதுமே நல்ல படங்கள் வெளியாகும்போது அதை பாராட்டி தன்னுடைய கருத்தைத் தெரிவிப்பதற்கு தயங்காதவர் என்பது குறிப்பிடத்தக்கது..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பா.ஜ.,வில் இணைகிறார் நடிகர் சிரஞ்சீவி?பா.ஜ.,வில் இணைகிறார் நடிகர் சிரஞ்சீவி? சுரேஷ்கோபிக்காக காத்திருக்கும் இரண்டாம் பாகங்கள் சுரேஷ்கோபிக்காக காத்திருக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in