Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மகேஷ்பாபுவின் புது டீல்

25 ஜூன், 2019 - 13:32 IST
எழுத்தின் அளவு:
Mahesh-babus-new-deal

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நேரடியாக சம்பளம் வாங்குவதற்குப் பதிலாக குறிப்பிட்ட சில ஏரியாக்களின் வினியோக உரிமையை தன் படத்திற்காக வாங்கிக் கொள்வார் ரஜினிகாந்த். பின்னர் அதை வேறு ஒருவருக்கு நல்ல லாபத்திற்கு விற்றுவிடுவார். இது அவர் வழக்கமாக வாங்கும் சம்பளத்தை விட அதிகமான வருமானத்தைப் பெற்றுத் தரும்.

இப்போது ரஜினிகாந்த் வழியில் தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவும் புது டீல் ஒன்றைப் போட்டிருக்கிறார். அடுத்து அவர் கதாநாயகனாக நடிக்க உள்ள 'சரிலேரு நீக்கெவரு' படத்தின் தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர்தான். ஆனால், இந்தப் படத்திற்காக நேரடியாக சம்பளம் எதையும் வாங்காமல் தியேட்டர் உரிமையைத் தவிர மற்ற உரிமையை அவர் எடுத்துக் கொள்வார்.

அதனடிப்படையில் சமீபத்தில் அப்படத்தின் சாட்டிலைட் உரிமையை அவர் 16 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டாராம். மேலும் டிஜிட்டல் உரிமை மூலம் 15 கோடி வரை வருமானம் வரும். அடுத்து ஆடியோ உரிமை மூலம் சில கோடிகள் வரலாம். மொத்தமாக சுமார் 40 கோடி வரை அவருக்குக் கிடைக்கும் என்கிறார்கள். இந்தப் படம் அடுத்த மாதம்தான் ஆரம்பமாக உள்ளது. படம் ஆரம்பமாவதற்கு முன்பே மகேஷ்பாபு ஒரு டீலிங்கை முடித்துவிட்டார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காமெடி நடிகரின் படத்தை தயாரிக்கும் கதாநாயகிகாமெடி நடிகரின் படத்தை தயாரிக்கும் ... சால்ட் அண்ட் பெப்பர் 2வாக உருவாகும் பிளாக் காபி சால்ட் அண்ட் பெப்பர் 2வாக உருவாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Robins - Chennai,இந்தியா
26 ஜூன், 2019 - 06:15 Report Abuse
Robins கமல் தான் முதல் முதலில் தான் நடித்த மகா நதி படத்தின் வாயிலாக ரஜினிக்கும் மற்றவர்களுக்கும் இந்த வழியை காட்டினார். இதன் மூலம் ரஜினியை விட அதிகம் சம்பாதித்தார் . அதன் பின் எல்லா மாஸ் ஹீரோக்களும் இதை செய்தார்கள்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in