மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
கடந்த சில நாட்களுக்கு முன்பாக மலையாள நடிகரும் தமிழில் திமிரு, ஸ்கெட்ச் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவருமான விநாயகன் மீது சமூக ஆர்வலரான மிருதுளா தேவி என்பவர் பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தன்னை அழைக்க மொபைல் போனில் விநாயகன் பேசியபோது அத்துமீறி பேசியதாக கடுமையாக குற்றம் சாட்டினார். இதையடுத்து விநாயகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் விநாயகன் தன்னிடம் பேசியதற்கான ஆதாரமாக ஆடியோ கிளிப் ஒன்றை போலீசார் வசம் கொடுத்துள்ளார் மிருதுளா தேவி. சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு நிகழ்வு நடந்ததாகவே தனக்கு ஞாபகம் இல்லை என்று கூறியிருந்தார் விநாயகன். இந்த நிலையில் அந்த ஆடியோவை கேட்ட விநாயகன் அதிலுள்ள குரல் தன்னுடையது தான் என்றும் ஆனால், தான் போனில் பேசியது ஒரு ஆணுடன் தானே தவிர பெண்ணுடன் இல்லை என்றும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.