Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தீ விபத்தில் இருந்து தப்பிய டொவினோ தாமஸ்

24 ஜூன், 2019 - 12:19 IST
எழுத்தின் அளவு:
Tovino-Thomas-narrowly-escapes-fire-accident

மலையாள திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகர் டொவினோ தாமஸ். கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார். தனது கதாபாத்திரத்திற்கு தேவைப்படுகிறது என்றால் அதற்காக ரிஸ்க் எடுப்பதற்கு கூட அவர் தயங்குவது இல்லை.. அந்த வகையில் தற்போது மலையாளத்தில் 'எடக்காடு பட்டாலியன் 06' என்கிற படத்தில் ஆயுதப்படை போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் டொவினோ தாமஸ்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோழிக்கோட்டில் நடைபெற்று வருகிறது இந்த படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறது சுற்றிலும் தீப்பற்றி எரியும் ஒரு கட்டிடத்திற்குள் எதிரிகளுடன் துப்பாக்கியை வைத்துக்கொண்டு டொவினோ தாமஸ் மோதுவதாக காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த காட்சியில் டொவினோ தாமஸ் முதுகில் தீப்பற்றுவது போலவும் அத்துடன் அவர் உருண்டு புரண்டு எதிரிகளை துப்பாக்கியால் சுடுவது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன.


இந்த ரிஸ்கான காட்சியில் டூப் போடலாம் என இயக்குனர் கூறினாலும், அதை மறுத்துவிட்டு தானே இந்த காட்சியில் நடித்துள்ளார் டொவினோ தாமஸ் இந்த சமயத்தில் அவர் முதுகில் செயற்கையாக பற்ற வைக்கப்பட்ட தீ எதிர்பாராதவிதமாக சற்று அதிகமாக பரவ ஆரம்பித்தது. ஆனால் அதையும் பொறுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட காட்சியில் அவர் நடித்து முடித்தார். ஆனால் பதறிப்போன படக்குழுவினர் உடனே தண்ணீரை ஊற்றி அவர் மீது பற்றிய தீயை அணைத்து அவரைக் காப்பாற்றினர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அண்ணனின் திருமணத்தில் கலந்துகொள்ளாத அல்லு அர்ஜுன்அண்ணனின் திருமணத்தில் ... மீ டூ விவகாரத்தில் சிக்கிய விநாயகன் வழக்கில் அதிரடி திருப்பம் மீ டூ விவகாரத்தில் சிக்கிய விநாயகன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in