நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் மலையாள நடிகர் ஜெயசூர்யா.. சமீபகாலமாக மறைந்த பிரபலங்கள் சிலரின் வாழ்க்கை வரலாற்றில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார் ஜெயசூர்யா.. அந்தவகையில் மறைந்த கேரள கால்பந்தாட்ட வீரர் வி.பி.சத்யன் என்பவரது வாழக்கையை மையப்படுத்தி கடந்த வருடம் உருவான 'கேப்டன்' என்கிற படத்தில் சத்யன் கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
இந்தநிலையில் மறைந்த பிரபல மலையாள நடிகர் சத்யனின் வாழ்க்கை வரலாறாக உருவாகும் படத்தில் சத்யனாக நடிக்கிறார் ஜெயசூர்யா. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவரே வெளியிட்டுள்ளார். கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ள சத்யன் 5௦ முதல் 7௦கள் வரை மலையாள சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தவர். அதுமட்டுமல்ல அப்போதுவரை நாடக பாணியிலான படங்கள் வெளியாகிக்கொண்டு இருந்த மலையாளத்தில் இவரது வரவிற்குப்பின் கமர்ஷியல் வடிவம் பெற்று ரியலிஸ்டிக்கான படங்கள் வெளிவர ஆரம்பித்தன என்பது குறிப்பிடத்தக்கது.