பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
நடிகர் விஷால், ஸ்ரேயா ரெட்டி, ரீமா சென் உள்ளிட்ட பலரும் நடித்தப் படம் திமிரு. இந்தப் படம் தவிர, மரியான், எல்லாம் அவன் செயல் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தவர் மலையாள நடிகர் விநாயகன். இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிப்பில் எல்லோரையும் கவரக் கூடியவர்.
இவர் மீது, கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும்; மாடலுமான மிருதுளா தேவி என்பவர், கேரளாவின் கல்பட்டு காவல் நிலையத்தில், பாலியல் குற்றச்சாட்டுக் கூறி புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரை அடுத்து, விநாயகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மிருதுளா தேவி, போலீசில் கொடுத்திருக்கும் புகாரில் கூறியிருப்பதாவது: நடிகர் விநாயகன் சமூக விஷயங்களில் ஆர்வமுடையவர் என்பதால், அவரை ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்க முடிவெடுத்து, அவரிடம் பேசி ஒப்புதல் பெற்றோம். பின், நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதற்காக, அவரது வீட்டுக்கு நானும், என்னுடைய அம்மாவும் சென்றோம். அப்போதுதான், அவரது கோர முகம் வெளிப்பட்டது. என்னிடமும், அம்மாவிடமும் அவர் படு ஆபாசமாகப் பேசி, பாலியில் ரீதியில் எங்கள் இருவரையும் அவருக்கு உடன் பட வலியுறுத்தினார். இது எங்களுக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தி விட்டது. அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்தப் புகாரில் கூறப்பட்டிருக்கிறது.
இதையடுத்தே, போலீசார் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.