Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

என்ஜிகே தோல்வி : காப்பான் படத்திலிருந்து பின்வாங்கிய கேரள விநியோகஸ்தர்

06 ஜூன், 2019 - 13:36 IST
எழுத்தின் அளவு:
Kerala-distributor-set-back-from-Kaappaan-movie

சமீபத்தில் வெளியான என்ஜிகே படத்தை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படமாக உருவாகியுள்ள 'காப்பான்' ஆகஸ்ட் 15ல் வெளியாக இருக்கிறது. கே.வி.ஆனந்த் டைரக்சனில் மோகன்லால், சூர்யா, ஆர்யா, சமுத்திரக்கனி, சாயிஷா சைகல், பூர்ணா என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் கேரள வெளியிட்டு உரிமையை பிரபல தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான முலக்குப்பாடம் பிலிம்ஸ் மிகப் பெரிய விலைக்கு வாங்கியிருந்தது. புலிமுருகன், ராம்லீலா உள்ளிட்ட 100 கோடி வசூல் படங்களை தயாரித்த இந்த நிறுவனம், 2.O மற்றும் விசுவாசம் ஆகிய படங்களை வாங்கி கேரளாவில் வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது காப்பான் பட விநியோக ஒப்பந்தத்தில் இருந்து இந்த நிறுவனம் தங்களை விடுவித்துக் கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. காரணம், சமீபத்தில் வெளியான சூர்யாவின் என்ஜிகே படம் கேரளாவிலும் தோல்வியை தழுவியுள்ளது தான். ஏற்கனவே, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சூர்யாவின் முந்தைய படங்கள், கேரளாவில் மிகப் பெரிய அளவில் வசூலிக்கவில்லை.

கேரளாவில் அதிக அளவில் ரசிகர்களை கொண்டிருந்தாலும் சூர்யாவின் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் காப்பான் படத்தை வெளியிடுவதில் இருந்து இந்த நிறுவனம் பின்வாங்கி விட்டதாக தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா - நிவின்பாலியின் லவ் ஆக்சன் ட்ராமா நிறைவுநயன்தாரா - நிவின்பாலியின் லவ் ஆக்சன் ... செம்மீன் ஷீலாவுக்கு ஜேசி டேனியல் விருது செம்மீன் ஷீலாவுக்கு ஜேசி டேனியல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in