நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
கடந்த ஆண்டு கேரளாவை அச்சுறுத்திய இரண்டு நிகழ்வுகள் நிபா வைரஸ் தாக்குதல் மற்றும் எதிர்பாராமல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு. இதில் நிபா வைரஸ் தாக்குதல், அது ஏற்படுத்திய அச்சுறுத்தல், அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, குறிப்பாக நோயாளிகளுக்கு உதவச்சென்று, தனது உயிரை இழந்த நர்ஸ் லினி என்பவரது கடைசி நிமிடங்கள் என இவற்றை மையப்படுத்தி 'வைரஸ்' என்கிற படத்தை இயக்கியுள்ளார் பிரபல இயக்குனர் ஆஷிக் அபு.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜூலை 7ஆம் தேதி இந்தப்படம் வெளியாக திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. படக்குழுவினர் இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது குறித்து அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியானதை தொடர்ந்து வைரஸ் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரணம் மீண்டும் இது போல ஒரு தாக்குதல் நிகழாது என்ற எண்ணத்தில் இந்த படத்தை உருவாக்கியவர்களுக்கு, சரியாக இந்த படம் ரிலீசாகும் நேரத்தில் நிபா வைரஸ் மீண்டும் கேரளாவிற்குள் ஊடுருவி இருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது. இந்த சமயத்தில் படத்திற்கு இதை இலவச விளம்பரமாக அமைந்தாலும் அதுகுறித்து படக்குழுவினரால் பெரிய அளவில் சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியவில்லை. மேலும் இந்த அச்சுறுத்தல் எழுந்துள்ள நேரத்தில் இது படத்திற்கான வரவேற்பை பாதிக்குமா இல்லை அதிகப்படுத்துமா என்கிற சந்தேகமும் அவர்களிடையே எழுந்துள்ளது.