Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

யாத்ரா 2 : ஜெகன்மோகன் ரெட்டி கிரீன் சிக்னல்

01 ஜூன், 2019 - 19:09 IST
எழுத்தின் அளவு:
Jagan-Mohan-reddy-green-signal-to-Yatra-2

இந்த வருடம் மம்முட்டி நடிப்பில் தெலுங்கில் யாத்ரா என்கிற படம் வெளியானது. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். ராஜசேகர ரெட்டி முதல்வராக அரியணை ஏறுவதற்கு முன்பு அவர் செய்த சூறாவளி நடைப்பயணம், அவரது அரசியல் வாழ்க்கையை எப்படி திசைதிருப்பியது என்பதைத்தான் இந்தப் படத்தில் மையக்கருவாக அமைத்து படமாக்கி இருந்தார் இயக்குனர் மகி ராகவ்.

சமீபத்தில் நடைபெற்ற ஆந்திர சட்டசபை தேர்தலில் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.. இவரது வெற்றியில் நான்கு மாதங்களுக்கு முன்பு வெளியான யாத்ரா படத்திற்கும் ஒரு கணிசமான பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.

இந்த நிலையில் யாத்ரா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடிவு செய்துள்ள இயக்குனர் மகி ராகவ், சமீபத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சென்று சந்தித்துள்ளார். அவருக்கு தனது வாழ்த்துக்களை கூறிய மகி ராகவ், யாத்ரா படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்குவதற்கான அனுமதியையும் ஜெகன்மோகன் ரெட்டியிடம் பெற்றுள்ளார்.

ஜெகன்மோகன் ரெட்டியும் முதல்வர் ஆவதற்கு முன்பு தனது தந்தையைப் போலவே, தானும் சுமார் 4000 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை பயணம் செய்து மக்களை நேரில் சந்தித்து அவர்களது அன்பைப் பெற்றார். இவர் ஆட்சியைப் பிடிப்பதற்கு அந்த நடை பயணமும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் இதை மையமாக வைத்து தான் கதையை உருவாக்க உள்ளாராம் இயக்குனர் மகி ராகவ்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காமெடி நடிகருக்காக வேலைகளை ஒதுக்கி வைத்த மோகன்லால் - மம்முட்டிகாமெடி நடிகருக்காக வேலைகளை ஒதுக்கி ... லேடீஸ் ஹாஸ்டலுக்கு விசிட் அடித்த ராம்கோபால் வர்மா லேடீஸ் ஹாஸ்டலுக்கு விசிட் அடித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Poovannan - Villupuram,இந்தியா
01 ஜூன், 2019 - 20:22 Report Abuse
Poovannan இந்த உலகம் ஒரு நாடக மேடை இதில் நாம் எல்லோரும் நடிகர்கள் நடக்கட்டும் நடக்கட்டும்???
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in