Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சத்குருவிடம் ஆலோசனை கேட்கும் மகாபாரதம் தயாரிப்பாளர்

01 ஜூன், 2019 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Rendamoozham-producer-ask-opinion-to-Sathguru

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு துபாயை சேர்ந்த தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி என்பவர் மகாபாரதத்தை தழுவி எழுதப்பட்ட ரண்டமூலம் என்கிற நாவலை ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக படமாக தயாரிக்க போவதாக அறிவித்தார். கதையின் நாயகன் பீமனாக மோகன்லால் நடிக்க, மற்றும் தென்னிந்திய பாலிவுட் நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. விளம்பரப்பட இயக்குனரும் மோகன்லாலை வைத்து கடந்த வருடம் கூடிய படத்தை இயக்கியவருமான ஸ்ரீகுமார் மேனன் இந்த படத்தை இயக்குவார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் திடீரென படத்தின் கதாசிரியரும் பிரபல எழுத்தாளருமான எம்.டி.வாசுதேவன் நாயர் தன்னிடமிருந்து கதையை பெற்று குறிப்பிட்ட காலத்திற்குள் படமாக்கவில்லை என்கிற கோபத்தில் கதையை தன்னிடமே ஒப்படைத்து விடும்படி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு இயக்குனர் அவரை சமாதானப்படுத்த முயற்சித்து அது தோல்வியில் முடிந்தது என அது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது

ஆனால் இந்த சர்ச்சைகளை எதுவும் விரும்பாத தயாரிப்பாளர் பி.ஆர்.ஷெட்டி மகாபாரதம் கதையை படமாக்கிய தீருவேன் என கூறியுள்ளார். மேலும் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மற்றும் கதாசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர் ஆகியோரை விட்டு தான் ரொம்ப தூரம் விலகி வந்து விட்டதாகவும், மகாபாரதத்திற்கு புதிய திரைக்கதை எழுத ஒரு நல்ல நபரை தனக்கு தந்து உதவுமாறு சத்குருவிடம் ஆலோசனை கேட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார் பி.ஆர்.ஷெட்டி.

ஏற்கனவே அறிவித்தபடி இந்த படத்தில் மோகன்லால் தான் நடிப்பாரா என்பதைக்கூட தன்னால் இப்போது உறுதியாக சொல்ல முடியாது என்று கூறியுள்ள பி.ஆர்.ஷெட்டி, இந்த படம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியினரிடமிருந்து உரிய அனுமதி பெற்று பின்னரே இந்த படத்தை தொடங்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மாரி 2 வில்லனுக்கு ஜூனில் மாதம் 3 படம் ரிலீஸ்மாரி 2 வில்லனுக்கு ஜூனில் மாதம் 3 படம் ... காமெடி நடிகருக்காக வேலைகளை ஒதுக்கி வைத்த மோகன்லால் - மம்முட்டி காமெடி நடிகருக்காக வேலைகளை ஒதுக்கி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in