இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? | துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தின் டீசர் வெளியானது | 32 ஆண்டுகள் கழித்து முதல் ஹீரோவுடன் மீண்டும் இணையும் மீனா | கிரிக்கெட் வீரராக அறிமுகமான கவுதம் மேனன் மகன் | தன் செல்லக் குட்டியை விமானத்தில் அழைத்துச் சென்ற கீர்த்தி சுரேஷ் | ஹனிமூனுக்காக நன்றி சொன்ன விக்னேஷ் சிவன் | பிரபாஸின் ‛சலார்' படத்தில் இணைந்த பிருத்விராஜ் |
கடந்த இரண்டு வருடங்களில் மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார் நடிகர் டொவினோ தாமஸ். கடந்த வருடம் வெளியான தனுஷின் மாரி-2 படத்தில் வித்தியாசமான வில்லனாக மிரட்டிய இவர், தற்போது மலையாள சினிமாவில் தொடர்ந்து கதாநாயனாக நடித்து வருகிறார்.
இந்த வருடம் ஏற்கனவே மோகன்லாலின் 'லூசிபர்' மற்றும் சமீபத்தில் வெளியான 'உயரே' ஆகிய படங்களில் இவர் நடித்திருந்தாலும் அவை கிட்டத்தட்ட சற்று நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோல் என்கிற அளவிலேயே இருந்தன. இந்த நிலையில் வரும் ஜூன் மாதம் இவர் நடித்துள்ள 3 படங்கள் வெளியாக இருக்கின்றன
கடந்த வருடம் கேரளாவை உலுக்கிய நிபா வைரஸ் தாக்குதலின் பின்னணியில் உருவாகியுள்ள 'வைரஸ்' என்கிற படத்திலும் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை அடுத்து இவர் நடித்துள்ள 'அண்ட் தி ஆஸ்கார் கோஸ் டு' என்கிற படம் வரும் ஜூன் 21ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தேசிய விருது புகழ் இயக்குனர் சலீம் அஹமது இயக்கியுள்ளார்.
இதையடுத்து, அருண் போஸ் என்பவர் இயக்கத்தில் டொவினோ நடித்துள்ள லுக்கா என்கிற படம் வரும் ஜூன் 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த வகையில் ஜூன் மாதம் முழுதும் டொவினோ தாமஸின் மாதமாக இருக்கும் என்று நன்றாகவே தெரிகிறது.